பயனர் அறிக்கையின் படி, Redmi 5 அப்டேட்டின் அளவு 458MB, அதேபோல் Redmi 5A அப்டேட்டின் அளவு 476MB ஆகும்.
MIUI 11 அப்டேட், அக்டோபர் பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது
இந்தியாவில் Redmi 5 மற்றும் Redmi 5A பயனர்கள் இப்போது MIUI 11 அப்டேட்டைப் பெறுகின்றனர். இரண்டு போன்களும் அக்டோபர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைப் (October Android security patch) பெறுகின்றனர். மேலும் ஒரு சில பயனர்கள் screenshots வெளியிடுகின்றனர். இது அப்டேட்டின் வருகையை உறுதிப்படுத்துகிறது. இந்த போன்கள் ஜியோமியின் இரண்டாவது தொகுப்பின் ஒரு பகுதியாகும். மேலும் மூன்றாவது தொகுப்பில் உள்ள பழைய போன்களான Redmi Note 5 Pro, Redmi Note 6 Pro, Redmi 6 மற்றும் Redmi 6A ஆகியவை அப்டேட்டைப் பெறத் தொடங்கியுள்ளன. இதன் மூலம், இந்தியாவில் MIUI 11 அப்டேட்டைப் பெற இப்போது ஒரு சில போன்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
Redmi 5 மற்றும் Redmi 5A அலகுகளில் MIUI 11 அப்டேட்டின் வருகையை உறுதிப்படுத்தும் பயனர் பதிவுகளால்
Mi Forums சிதறிக்கிடக்கின்றன. Redmi 5 அப்டேடின் பதிப்பு எண் MIUI 11.0.1.0.ODAMIXM உடன் வருகிறது. Redmi 5A அப்டேட்டின் பதிப்பு எண் MIUI 11.0.2.0.OCKMIXM உடன் வருகிறது. ஸ்கிரீன் ஷாட்களின் அடிப்படையில், Redmi 5-க்கான அப்டேட்டின் அளவு 45MB ஆகவும், Redmi 5A-க்கான அப்டேட்டின் அளவு 476MB ஆகவும் உள்ளது.
குறிப்பிட்டுள்ளபடி, இரண்டு போன்களுக்கான அப்டேட்கள் அக்டோபர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் (October Android security patch) கொண்டுவருகின்றன. MIUI 11 உடன் வரும் பிற அம்சங்களில் புதிய minimalistic design, புதிய dynamic sound effects, புதிய Mi File Manager app, Steps Tracker, Wallpaper Carousel மற்றும் Floating Calculator ஆகியவை அடங்கும்.
அனைத்து Redmi 5 மற்றும் Redmi 5A பயனர்களும் அப்டேட்டைப் பெற்றவுடன் அதை பதிவிறக்கம் செய்ய பரிந்துரைக்கிறோம். நீங்கள் அறிவிப்பைப் பெறவில்லை எனில், Settings > About phone > System update-க்குச் சென்று உங்கள் தொலைபேசியில் MIUI 11 அப்டேட் கிடைப்பதை சரிபார்க்கலாம். ஜியோமியிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை அல்லது இதுவரை எந்த பதிவிறக்க இணைப்பும் கிடைக்கவில்லை. உறுதிப்படுத்த நாங்கள் ஜியோமியை அணுகியுள்ளோம், மீண்டும் அறிவிப்பு வந்தவுடன் இந்த இடத்தைப் புதுப்பிப்போம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Mushrooms Could Power Future Eco-Friendly Computers, Study Suggests
MIT Physicists Discover a Way to See Inside Atoms Using Tabletop Molecular Technique
Saturn’s Icy Moon Enceladus Organic Molecules May Have Been Fromed by Cosmic Rays, Scientists Find
Researchers Use AI to Predict Storm Surges Faster and More Accurately