ஃப்ளிப்கார்ட், Mi தளங்களில் 'ரெட்மீ 7A', இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் சலுகைகள் என்ன?

இன்றைய விற்பனையில் 200 ரூபாய் தள்ளுபடியை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஃப்ளிப்கார்ட், Mi தளங்களில் 'ரெட்மீ 7A', இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் சலுகைகள் என்ன?

4,000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த 'ரெட்மீ 7A'

ஹைலைட்ஸ்
  • 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு வகையின் விலையில் 5,799 ரூபாய்
  • Mi தளத்தில், 2,200 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகைகள்.
  • 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு வகையின் விலை 5,999 ரூபாய்
விளம்பரம்

இந்த மாதத்தின் துவக்கத்தில் அறிமுகமான சியோமியின் பட்ஜெட் ஸ்மார்ட்போனிற்கான மற்றொரு விற்பனை இன்று நடைபெறவுள்ளது. ரெட்மீ 7A ஸ்மார்ட்போனின் இன்றைய விற்பனை, ஃப்ளிப்கார்ட், Mi தளங்களில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் HD+ திரை, ஸ்னேப்ட்ராகன் 439 எஸ் ஓ சி ப்ராசஸர், 4,000mAh பேட்டரி அளவு பொன்ற அம்சங்களை கொண்டுள்ளது. கேலக்சி M10, நோக்கியா 2.2 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனிற்கு, முன்னதாக பலமுறை இம்மாதிரியான ஃப்ளாஷ் சேல் விற்பனையை சியோமி நிறுவனம் நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மீ 7A: விலை, சலுகைகள்!

இரண்டு வகைகளில் அறிமுகமான ரெட்மீ 7A ஸ்மார்ட்போன், 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு, 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் 5,999 ரூபாய், 6,199 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு (Matte Black), நீலம் (Matte Blue), மற்றும் தங்கம் (Matte Gold) என மூன்று வண்ணங்களில் அறிமுகமானது. 

இன்றைய விற்பனையில் 200 ரூபாய் தள்ளுபடியை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதன்படி, 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு வகை 5,799 ரூபாய் என்ற விலையிலும், 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு வகை 5,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi தளங்களில் விற்பனையாகவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனிற்கு Mi தளத்தில், 2,200 ரூபாய் கேஷ்பேக், 125GB கூடுதல் டேட்டா என பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரெட்மீ 7A: சிறப்பம்சங்கள்!

இரண்டு சிம் வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது. 5.45-இன்ச் HD திரை (720x1440  பிக்சல்கள்), 18:9 திரை விகிதத்தை கொண்டுள்ளது அந்த ஸ்மார்ட்போன். ரெட்மீ 7A ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 439 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் அலவிலான கேமராவை கொண்டுள்ளது. மேலும், 5 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் பேஸ் அன்லாக் அம்சம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10W சார்ஜருடன், 4,000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் 256GB வரையில் சேமிப்பை கூட்ட microSD கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் 4G, வை-பை, ப்ளூடூத் v4.0 வசதி, மைக்ரோ-USB, 3.5mm ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality
  • Excellent battery life
  • Two-year warranty
  • Bad
  • Sub-par camera performance
  • Bloatware and ads in MIUI
Display 5.45-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1440 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  2. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  3. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  4. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
  5. iQOO 15: Snapdragon 8 Gen 4, 150W சார்ஜிங்! அடுத்த வருஷம் மாஸ் என்ட்ரி கொடுக்கப்போகுது!
  6. Infinix Hot 60i 5G: ₹10,000-க்குள்ளே 6,000mAh பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
  7. Vu Glo QLED TV 2025: 120W சவுண்ட்பார், 120Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் அதிரடி! விலை மற்றும் முழு அம்சங்கள்!
  8. Realme P4 சீரிஸ்: 6,000 nits டிஸ்ப்ளேவுடன் ஒரு புது புரட்சி! ஆகஸ்ட் 20-ல் இந்தியாவில் வெளியீடு
  9. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  10. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »