Photo Credit: Weibo/ ITHeat
அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னர், Realme XT ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை ரியல்மீ நிறுவனம் வெளியிட்டுள்ளது. Realme XT ஸ்மார்ட்போன், ஓப்போவிலிருந்து பிரிந்த வந்த இந்த நிறுவனத்தின் 64 மெகாபிக்சல் ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட ஊடங்களை மட்டும் அழைத்து சீனாவில் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்திய ரியல்மீ நிறுவனம், Realme XT ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெய்போ தளங்களிலும் வெளியாகியுள்ளது. இன்னும் Realme XT ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற தகவல்கள் அறிவிக்கப்படவில்லை, Realme 5 தொடர் ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வில், ரியல்மீ இந்தியாவில் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத் வெளியிட்ட டீசரை வைத்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Realme XT ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 SoC ப்ராசஸர், 8GB அளவு வரையிலான RAM, 128GB வரையிலான சேமிப்பு அளவுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. 4GB + 64GB, 6GB + 64GB, மற்றும் 8GB + 128GB என்று மூன்று வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்டர்-ட்ராப் நாட்ச் முன்புறத்துடன் 6.4-இன்ச் சூப்பர் AMOLED திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. கூடவே, 4,000mAh பேட்டரி, 20W VOOC 3.0 விரைவு சார்ஜிங் வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
கேமராக்களை பொருத்தவரை இந்த Realme XT ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முக்கியமாக, 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மற்ற மூன்று கேமராக்கள் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா என அமைந்துள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களின் வண்ணத்தை பொருத்தவரை நீலம் (Pearl Blue) என்ற ஒரே நிறம்தான் தற்போதைக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை (Silver Wing White) என்ற மற்றொரு வண்ணத்தில் அறிமுகமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மென்பொருளை பொருத்தவரை ஆண்ட்ராய்ட் 9 பையை (Android 9 Pie) மையப்படுத்தி ColorOS 6 அமைப்பை கொண்டு இயங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்த எந்த தகவலையும் ரியல்மீ நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், அடுத்த மாதத்தில் சீனாவில் விற்பனைக்கு வந்துவிடும் என்ற அறிவிப்பை அறிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்