ரியல்மீ நிறுவனம், துவங்கிய சில வருடங்களிலேயே ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்டது. இந்த நிறுவனம் நேரடியாக சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமியுடன் மோதுகிறது. சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. அப்படி சமீபத்தில் நிகழ்ந்த Realme 5 மற்றும் Realme 5 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வில் தனது அடுத்த ஸ்மார்ட்போனான Realme XT பற்றிய ஒரு டீசரை வெளியிட்டிருந்தது. கடந்த வாரம், இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களை சீனாவில் ஒரு நிகழ்ச்சி மூலம் வெளியிட்டிருந்தது. அதன்பின் இந்த ஸ்மார்ட்போன்களின் விவரங்களை இந்தியாவிலும் வெளியிட்டது, இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன்களின் விலை, அறிமுக தேதி, விற்பனை ஆகியவை இன்னும் புதிராகவே உள்ளது. அதுபற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் உள்ளே!
Realme XT அடுத்த வாரம் இந்தியாவில் செப்டம்பர் 13 ஆம் தேதி புதுதில்லியில் ஒரு பத்திரிகையாளர் நிகழ்வில் அறிமுகமாகவுள்ளது.
ரியல்மீ ட்விட்டரில், அறிமுக நிகழ்வு தேதி மற்றும் நேரத்தை வெளியிட்டு, அதனுடன் ஒரு இணைப்பையும் வெளியிட்டிருந்தது. அந்த இணைப்பை பயன்படுத்தி ரசிகர்கள் இந்த நிகழ்விற்கான தங்களது இடத்திற்கு பதிவு செய்துகொள்ளலாம். இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் ரசிகர்களுக்கான பதிவு செயல்முறை குறித்த கூடுதல் விவரங்களுடன், ரியல்மீயின் இணையதளத்தில் ஒரு மன்ற இடுகைக்கு உங்களை அழைத்துச் செல்லும். அங்கு இந்த ஸ்மார்ட்போன்களின் கேமரா பற்றி விளக்கும் ஒரு டீசர் படம் ‘Project Hawkeye' என்ற பெயரைக் கொண்டு இடம்பெற்றுள்ளது.
இந்த Realme XT ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் சீனாவிலும் அறிமுகமாகாத நிலையில், Realme XTயின் விலை மர்மாகவே உள்ளது. 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 4 பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், சீனாவில் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட விலையிலேயே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் கடந்த வாரத்தில் சீனாவில் 1,399 யுவான்கள் (சுமார் 14,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமானது.
4GB + 64GB, 6GB + 64GB, மற்றும் 8GB + 128GB என்று மூன்று வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் வண்ணத்தை பொருத்தவரை நீலம் (Pearl Blue) என்ற ஒரே நிறம்தான் தற்போதைக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை (Silver Wing White) என்ற மற்றொரு வண்ணத்தில் அறிமுகமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Realme XT ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 SoC ப்ராசஸர், 8GB அளவு வரையிலான RAM, 128GB வரையிலான சேமிப்பு அளவுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. வாட்டர்-ட்ராப் நாட்ச் முன்புறத்துடன் 6.4-இன்ச் சூப்பர் AMOLED திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. முன் மற்றும் பின் என இரண்டு புறங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்டிராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. மென்பொருளை பொருத்தவரை ஆண்ட்ராய்ட் 9 பையை (Android 9 Pie) மையப்படுத்தி ColorOS 6 அமைப்பை கொண்டு இயங்குகிறது.
கேமராக்களை பொருத்தவரை இந்த Realme XT ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முக்கியமாக, 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மற்ற மூன்று கேமராக்கள் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா என அமைந்துள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கூடவே, 4,000mAh பேட்டரி, 20W VOOC 3.0 விரைவு சார்ஜிங் வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. டைப்-C சார்ஜர் போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்