Realme XT இறுதியாக இந்தியாவில் வெளியீட்டு தேதியைக் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, ரியல்மீ அதன் 64 மெகாபிக்சல் ஸ்மார்ட்போனைச் சுற்றி மிகைப்படுத்தலை உருவாக்கி வருகிறது, இந்த நிறுவனம் ரியல்மீ 5 வெளியீட்டு நிகழ்வின் போதே, தயாரிப்பின் இறுதிப் பெயரை நிறுவனம் வெளிப்படுத்தியது. Realme XT ஒரு நான்கு கேமரா ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் சிறப்புக்குரியது என்னவென்றால், இது 64 மெகாபிக்சல் சென்சார் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். ரியல்மீ ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவல் என்னவென்றால், Realme XT அடுத்த வாரம் இந்தியாவில் செப்டம்பர் 13 ஆம் தேதி புதுதில்லியில் ஒரு பத்திரிகையாளர் நிகழ்வில் அறிமுகமாகவுள்ளது. ரியல்மீ நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்காக தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது, இதன்மூலம் அவர்கள் பதிவு செய்து, இந்த நிகழ்விற்கான டிக்கெட்டை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
ரியல்மீ ட்விட்டரில், அறிமுக நிகழ்வு தேதி மற்றும் நேரத்தை வெளியிட்டு, அதனுடன் ஒரு இணைப்பையும் வெளியிட்டிருந்தது. அந்த இணைப்பை பயன்படுத்தி ரசிகர்கள் இந்த நிகழ்விற்கான தங்களது இடத்திற்கு பதிவு செய்துகொள்ளலாம். இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் ரசிகர்களுக்கான பதிவு செயல்முறை குறித்த கூடுதல் விவரங்களுடன், ரியல்மீயின் இணையதளத்தில் ஒரு மன்ற இடுகைக்கு உங்களை அழைத்துச் செல்லும். அங்கு இந்த ஸ்மார்ட்போன்களின் கேமரா பற்றி விளக்கும் ஒரு டீசர் படம் ‘Project Hawkeye' என்ற பெயரைக் கொண்டு இடம்பெற்றுள்ளது.
இந்த டீசர் படம் கேமரா லென்ஸ்கள் என்னவாக இருக்கும் என்பதை அறிவியல் பார்வையில் குறிப்பிடுகின்றன, இதில் நான்கு வரிகள் உள்ளன - துல்லியமான அருகாமை கவனம் (Precise Close Focus), மிருதுவான காட்சிகள் (Crisp Shots), புத்திசாலித்தனமான இரவு காட்சி ( Brilliant Night View), அல்ட்ரா வைட் வியூ (Ultra Wide View) - இது கேமரா திறன்களை குறிப்பிடுகிறது.
Realme XT அடுத்த வாரம் இந்தியாவில் செப்டம்பர் 13 ஆம் தேதி புதுதில்லியில் ஒரு பத்திரிகையாளர் நிகழ்வில் அறிமுகமாகவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்பது இன்னும் ஒரு மர்மமாக இருக்கிறது, ஆனால் இது அடிப்படையில் 64 மெகாபிக்சல் சென்சார் கொண்ட ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் போன்றே உள்ளது. அதனால் இதன் விலை 20,000 ரூபாய் அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Realme XT ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 SoC ப்ராசஸர், 8GB அளவு வரையிலான RAM, 128GB வரையிலான சேமிப்பு அளவுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. வாட்டர்-ட்ராப் நாட்ச் முன்புறத்துடன் 6.4-இன்ச் சூப்பர் AMOLED திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. முன் மற்றும் பின் என இரண்டு புறங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்டிராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. மென்பொருளை பொருத்தவரை ஆண்ட்ராய்ட் 9 பையை (Android 9 Pie) மையப்படுத்தி ColorOS 6 அமைப்பை கொண்டு இயங்குகிறது.
கேமராக்களை பொருத்தவரை இந்த Realme XT ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முக்கியமாக, 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மற்ற மூன்று கேமராக்கள் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா என அமைந்துள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கூடவே, 4,000mAh பேட்டரி, 20W VOOC 3.0 விரைவு சார்ஜிங் வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. டைப்-C சார்ஜர் போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்