இந்தியாவில் Realme X50 Pro-வின் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.37,999-யில் இருந்து தொடங்குகிறது.
Realme X50 Pro பிப்ரவரி 24 அன்று அறிமுகமான நாளில் முதலில் விற்பனைக்கு வந்தது
பிப்ரவரி 24-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme X50 Pro 5G, இன்று இரண்டாவது முறையாக விற்பனைக்கு வருகிறது. இந்த விற்பனை, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட்டில் நடைபெறும்.
Realme X50 Pro 5G விற்பனை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மதியம் 12 மணிக்கு நேரலைக்கு வரும். சலுகைகளில், பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக் அடங்கும். பிளிப்கார்ட்டில் வாங்குபவர்கள் Realme X50 Pro 5G-யில் no-cost EMI-ஐப் பெற முடியும். ரியல்மி இணையதளத்தில், வாடிக்கையாளர்கள் ரூ.500 மதிப்புள்ள மொபிக்விக் சூப்பர் கேஷ் மற்றும் காஷிஃபை எக்ஸ்சேஞ்ச் வடிவில் சமமான கேஷ்பேக், no-cost EMI மற்றும் ரூ.11,500 மதிப்புள்ள ஜியோ பலன்கள் போன்ற சலுகைகளைப் பெறலாம்.
Realme X50 Pro-வின் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.37,999-யாகவும், 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ.39,999-யாகவும் மற்றும் டாப்-ஸ்பெக் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.44,999-யாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Realme X50 Pro 5G, ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்டால் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி வரை ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது Realme UI உடன் Android 10-ல் இயங்குகிறது. இந்த போன் 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 6.44 இன்ச் முழு எச்டி + ஹோல்-பஞ்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது. இதில், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் பொக்கே பிடிப்புக்கான 2-மெகாபிக்சல் போட்ரெயிட் கேமரா ஆகியவற்றுடன் f/1.8 aperture உடன் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், உள்ளது. போனின் முன் கேமராவில் இரண்டு சென்சார்கள், 32 மெகாபிக்சல் பிரதான ஷூட்டர் மற்றும் மற்றொரு 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவையும் கொண்டுள்ளது.
Realme X50 Pro 5G-யின் இணைப்பு விருப்பங்களில் டூயல்-மோட் 5G (NSA/ SA & mainstream bands), 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS மற்றும் USB Type-C port ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது 65W சூப்பர் டார்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,200 எம்ஏஎச் பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Noise Master Buds 2 With Sound by Bose, Familar Design Unveiled at CES 2026
YouTube Music Users Raise Concerns Over AI-Generated Songs Flooding Their Recommendations