Realme X50 Pro 5G, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறது.
Realme X50 Pro 5G, Rust Red மற்றும் Moss Green கலர் ஆப்ஷகளில் வருகிறது
இந்தியாவின் முதல் 5G போனாக கூறப்படும் Realme X50 Pro 5G இன்று வெளியாக உள்ளது. இந்த போன் முதலில் MWC 2020-ல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளியீட்டு நிகழ்வு இந்தியாவுக்கு நகர்த்தப்பட்டது.
Realme X50 Pro 5G's வெளியீட்டு நிகழ்வு பிப்ரவரி 24-ஆம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கும். இது ரியல்மியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதிகாரப்பூர்வ ரியல்மி மொபைல்கள் ட்விட்டர் பக்கம் மற்றும் ரியல்மி நிகழ்வு தளத்திலும் கூடுதல் வெளியீட்டு அப்டேட்டுகளை சரிபார்க்கலாம். Realme X50 Pro 5G நிகழ்வு சிறப்பம்சங்கள் மற்றும் எங்கள் பக்கத்திலிருந்து மேலும் தொடர்புடைய உள்ளடக்கங்களுக்கு, கேஜெட்ஸ் 360 உடன் இணைந்திருங்கள்.
இந்தியாவில் Realme X50 Pro 5G-யின் விலை ரூ.50,000-யாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், மேற்கூறிய விலை, போனின் அடிப்படை வேரியண்டிற்கா அல்லது அதன் டாப்-ஆஃப்-லைன் மாடலுக்கா என்பது தெளிவாக இல்லை.
Realme X50 Pro 5G, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படும். ஆன்-போர்டு ஸ்னாப்டிராகன் X55 LTE, இந்த போன் டூயல்-மோட் (NSA+SA) 5G இணைப்பை வழங்குகிறது என்பதை உறுதி செய்யும். Realme X50 Pro ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா அடங்கும். இது 20x hybrid ஜூம் ஆதரவைக் கொண்டுள்ளது.
முன்பக்கத்தில், இந்த போனில் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் ஒரு சூப்பர் AMOLED டிஸ்பிளே மற்றும் hole-punch உள்ளது. இது இரண்டு கேமரா லென்ஸ்கள் கொண்டுள்ளது, அவற்றில் ஒன்று 32 மெகாபிக்சல் ஸ்னாப்பர் ஆகும். Realme X50 Pro 5G-யின் பேட்டரி திறனை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், 65W சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை கொண்டுவருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனை Rust Red மற்றும் Moss Green கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset