ஜனவரி 7-ல் வெளியாகிறது Realme X50 5G!

ஜனவரி 7-ல் வெளியாகிறது Realme X50 5G!

Realme X50 5G, dual-mode 5G ஆதரவை வழங்கும்

ஹைலைட்ஸ்
  • Realme X50 5G-யின் TENAA பட்டியல் 4,100mAh பேட்டரியை குறிக்கிறது
  • வரவிருக்கும் போனில் 6.57-inch டிஸ்ப்ளே இருக்கும் என்று கூறப்படுகிறது
  • Realme X50 5G, Snapdragon 765G SoC-யில் இருந்து சக்தியை ஈர்க்கும்
விளம்பரம்

ரியல்மி தனது முதல் 5G போனான Realme X50 5G-ஐ ஜனவரி 7-ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஏராளமான கசிவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ டீஸர்களில் தோன்றிய பின்னர், Realme X50 5G இப்போது TENAA-வில் காணப்படுகிறது. அதன் சில முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்துகிறது. RMX2051 ​​என்ற மாடல் எண்ணைக் கொண்டு, போனின் TENAA பட்டியல், இன்னும் படங்களுடன் புதுப்பிக்கப்படவில்லை. ஆனால், சான்றிதழ் தரவுத்தளத்தில், 4,100mAh பேட்டரியைக் பேக் செய்யும்ஜ் என்று குறிப்பிடுகிறது. கூடுதலாக, இந்த போன் 6.57-inch டிஸ்ப்ளே இடம்பெறும் என்று கூறப்படுகிறது. 

Realme X50 5G's TENAA பட்டியல் dual-SIM, dual standby அம்சத்தை ஆதரிக்கும் என்று தெரிவிக்கிறது. ரியல்மியின் வரவிருக்கும் போன் 163.8 x 75.8 x 8.9 அளவீட்டை கொண்டிருக்கும் என்றும், இது 6.57-inch டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. Realme X50 5G, இரண்டு முன் கேமராக்களில் pill-shaped hole-punch-ஐ வெளிப்படுத்தும் என்பதை ஏற்கனவே அறிவோம். மேலும், RMX2051 ​​aka Realme X50 5G-ன் TENAA பட்டியலும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,100mAh பேட்டரி இருப்பதைக் குறிப்பிடுகிறது. 

Realme ஏற்கனவே Realme X50 5G வடிவமைப்பைப் பற்றிய ஒரு காட்சியைக் கொடுத்துள்ளது. அதன் குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இந்த போன் octa-core Qualcomm Snapdragon 765G processor பேக் செய்வதையும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இது dual-mode 5G (SA +NSA) இணைப்பை ஆதரிக்கும். போனில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என்று கசிவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் செல்ஃபிகளுக்காக, 8 மெகாபிக்சல் depth சென்சார் உதவியுடன், 32 மெகாபிக்சல் shooter-ஐக் கொண்டிருக்கும். Realme X50 5G, ஜனவரி 7-ஆம் தேதி சீனாவில் நடைபெறும் நிகழ்வில் Realme X50 5G Youth Edition என அழைக்கப்படும் போனின் watered-down பதிப்போடு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, Realme X50 5G, RMX 2051
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »