Photo Credit: Weibo/ Realme
Realme X50 5G டூயல் செஃபி கேமராவுடன் வரும்
Realme X50 5G வெளியீட்டு தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளது என்று, சீன நிறுவனம் வெய்போவில் ஒரு பதிவின் மூலம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி வழங்கும் முதல் 5G ஸ்மார்ட்போனாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டீஸர்கள் மூலம், Realme X50 5G இரட்டை சேனல் வைஃபை மற்றும் 5G இணைப்பு ஆதரவுடன் வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், Qualcomm Snapdragon 765G SoC ஆகியவை அடங்கும். ரியல்மி போனில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பும் இருக்கும். Realme X50 5G, ஆரம்பத்தில் ஜனவரி 25-ஆம் தேதி Chinese Spring Festival-ன் சிறிது காலத்திற்கு முன்பே தொடங்கப்படும் என்று ஊகிக்கப்பட்டது.
Realme X50 5G வெளியீடு ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறும் என்று பரிந்துரைக்கும் டீஸர் படத்தை வெய்போ பதிவு கொண்டுள்ளது. இது புதிய Realme போனின் வெளியீட்டு தேதியாக ஜனவரி 5-ஐ பரிந்துரைத்த ஒரு சுவரொட்டி மூலம், Realme CMO Xu Qi Chase வழங்கிய சமீபத்திய குறிப்பை இது உறுதிப்படுத்துகிறது.
Realme X50 5G வெளியீட்டு தேதி கிண்டல் செய்யப்பட்டது
Photo Credit: Weibo/ Realme
இது ஜனவரி 5 இல்லையென்றால், Realme X50 5G வெளியீடு ஜனவரி 15 ஆம் தேதி திட்டமிடப்படலாம். ஏனெனில், டீஸர் படம் எண் ஐந்தில் ஒரு காட்சியைக் காட்டுகிறது. ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை வருகிறது. அதே சமயம் ஜனவரி 5 ஞாயிற்றுக்கிழமை. எனவே ரியல்மி முந்தையதைத் தேர்ந்தெடுப்பதில் அர்த்தமுள்ளது. மேலும், சீன நிறுவனங்கள் தங்களது புதிய அறிமுகங்களை செவ்வாய்க்கிழமை அடிக்கடி நடத்துகின்றன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.
இது ஜனவரி 5 அல்லது ஜனவரி 15 என்பது முக்கியமல்ல, இறுதியாக நாளை அதிகாரப்பூர்வ விவரங்களைப் பெறுவோம்.
முந்தைய டீஸர்கள் Realme X50 5G-யின் முக்கிய சிறப்பம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளன. ஸ்மார்ட்போன் மேம்பட்ட VOOC 4.0 ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் கிண்டல் செய்யப்படுகிறது, இது ஐந்து சிப் பாதுகாப்புடன் கிடைக்கும். வெப்பமூட்டும் மூலங்களின் (heating sources) 100 சதவிகித பாதுகாப்பு வழங்க ஐந்து பரிமாண பனி-குளிரூட்டப்பட்ட வெப்பச் சிதறல் முறையையும் (five-dimensional ice-cooled heat dissipation system) சமீபத்திய டீஸர் உறுதிப்படுத்தியது.
Realme X50 5G, 90Hz refresh rate உடன் 6.6-inch டிஸ்ப்ளே இருக்கும் என்று சில சமீபத்திய வதந்திகள் கூறியுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் வரை வரும். மேலும் ,32-மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட இரட்டை செல்பி கேமரா அமைப்பும் இதில் அடங்கும். இது 64-மெகாபிக்சல் Sony IMX686 முதன்மை சென்சாரையும் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
Realme X50 Launch Date May Be January 5, CMO's Latest Post Suggests
Realme X50 5G to Be Powered by Snapdragon 765G SoC, Company Reveals
Realme X50 5G to Come With Enhanced VOOC 4.0 Flash Charge Fast Charging Tech, Teaser Reveals
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்