இந்தியாவில் Realme X50 Pro 5G-யின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.37,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Realme X50 Pro 5G, 90Hz டிஸ்பிளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பைக் கொண்டுள்ளது
ரியல்மியின் புத்தம் புதிய Realme X50 Pro 5G ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமானது. இது ஒப்போ ஸ்பின்-ஆஃப் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன் 65W சூப்பர் டார்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் Realme X50 Pro 5G-யின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.37,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.39.999 ஆகும். 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கூடிய டாப்-ஆஃப்-லைன் மாடல் ரூ.44.999 விலைக் குறியிட்டுடன் வருகிறது. இந்த மூன்று ஆப்ஷன்களும் இந்தியாவில் இன்று மாலை 6 மணி முதல் Mass Green மற்றும் Rust Red கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும். மேலும், இந்த விற்பனை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் மூலம் நடைபெறும்.
டூயல்-சிம் (நானோ) Realme X50 Pro 5G, Realme UI உடன் Android 10-ல் இயக்குகிறது. இந்த போன், 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 6.44 இன்ச் ஃபுல்-எச்டி + (1080x2400 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போனில் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 865 SoC உள்ளது, இது Adreno மற்றும் 12 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது.
![]()
இந்த போனில் குவாட் பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் f/1.8, six-piece லென்ஸுடன் 64 மெகாபிக்சல் முதன்மை சாம்சங் GW1 சென்சார் அடங்கும். இந்த அமைப்பில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமராவும் அடங்கும். ஸ்மார்ட்போனில் முன்பக்கத்தில் இரட்டை செல்ஃபி கேமரா அமைப்பும் உள்ளது, இதில், f/2.5 சென்ஸுடன் 32 மெகாபிக்சல் சோனி IMX 616 முதன்மை சென்சாரும், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சாரும் அடங்கும்.
Realme, 128GB மற்றும் 256GB UFS 3.0+ ஸ்டோரேஜை X50 Pro 5G-க்கு வழங்குகிறது. இணைப்பு விருப்பங்களில் 5G (NSA/ SA), 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். போனில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light, gyroscope, in-display fingerprint சென்சார் மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 65W சூப்பர் டார்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset