Realme X2 Pro நேற்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியாவின் வெளியீட்டு தேதியையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. Realme X2 Pro நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மே அறிவித்துள்ளது. வெளியீட்டு நிகழ்வு புதுதில்லியில் இந்திய நேரப்படி, மதியம் 12.30 மணிக்குத் தொடங்கும். நிறுவனம், போனின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்களை அடுத்த மாதம் நடைபெறும் நிகழ்வில் வெளியிடும்.
விலை:
Brick மற்றும் Cement finish உள்ள Realme X2 Pro Master Edition ஒற்றை 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதன் விலை சீனாவில் CNY 3,299 ஆகும். இந்தியாவில் Realme X2 Pro விலை நிர்ணயம் சீனா விலை வரம்பிற்கு அருகில் இருக்க வேண்டும்.
சிறப்பம்சங்கள்:
இரட்டை சிம் (நானோ) கொண்ட Realme X2 Pro, ColorOS 6.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. இதில், 6.5-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Fluid டிஸ்பிளேவுடன் 20:9 aspect ratio, 90Hz refresh rate மற்றும் 135Hz touch sampling rate ஆகிய அம்சங்கள் அடங்கும். கூடுதலாக in-display fingerprint சென்சார் உள்ளது. ஹூட்டின் படி, 6GB, 8GB மற்றும் 12GB of LPDDR4X RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 855+ SoC-யால் இயக்கப்படுகிறது. 64GB (dual-channel UFS 2.1), 128GB (UFS 3.0) மற்றும் 256GB (UFS 3.0) ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டதுதான் Realme X2 Pro.
கேமராவைப் பொறுத்தவரை, Realme X2 Pro-வில் quad rear கேமரா அமைப்பு உள்ளது. மேலும், six-piece, f/1.8 lens உடன் 64-megapixel Samsung GW1 முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது. f/2.5 telephoto lens உடன் 13-megapixel secondary sensor, f/2.2 aperture உடன் 115-degree ultra-wide-angle lens கொண்ட 8-megapixel tertiary sensor மற்றும் 2-megapixel depth sensor ஆகிய கேமரா அமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. Realme X2 Pro-வில், செல்ஃபிக்களுக்காக f/2.0 lens உடன் முன்பக்கத்தில் 16-megapixel Sony IMX471 கேமரா சென்சார் உள்ளது. portrait shots-ஐ முன் கேமரா ஆதரிக்கிறது.
இணைப்பு விருப்பங்களில், 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். போனில் accelerometer, ambient light, gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகிய சென்சார்கள் அடங்கும். Dolby Atmos மற்றும் Hi-Res Audio technology ஆதரவுடன் இரட்டை ஸ்பீக்கர்கள் உள்ளன.
Realme X2 Pro-வில் 50W SuperVOOC Flash Charge ஆதரவுடன், 4,000mAh பேட்டரியை ரியல்மி வழங்குகிறது. இந்த போன் 161x75.7x8.7mm அளவீட்டையும் 199 கிராம் எடையையும் கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்