Realme X தனது பிப்ரவரி 2020 OTA அப்டேட்டை இந்தியாவில் பெறத் தொடங்கியது. இந்த அப்டேட் 2.79 ஜிபி எடையுள்ளதாக இருக்கும் மற்றும் மென்பொருள் பதிப்பை RMX1901EX_11_A.12 வரை அதிகரிக்கிறது. மேலும், இது பிப்ரவரி 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் ColorOS 6-ன் சமீபத்திய பதிப்பைக் கொண்டுவருகிறது. இருப்பினும், புதிய மென்பொருள் இன்னும் Android Pie-ஐ அடிப்படையாகக் கொண்டது, ஆண்ட்ராய்டு 10 அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நினைவு கூர, Realme X கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வேரியண்டிற்கு ரூ.16,999-யாக அறிமுகமானது.
ரியல்மியின் சமூக மன்றங்களில் உள்ள பதிவின் படி, Realme X பிப்ரவரி மாதத்திற்கான புதிய அப்டேட்டைப் பெறுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பிட்டது போல, இந்த புதிய அப்டேட் பிப்ரவரி 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் ஸ்மார்ட்போனுக்கான ColorOS 6-ன் சமீபத்திய பதிப்பைக் கொண்டுவருகிறது. கூடுதலாக, புதிய மென்பொருள் சில மூன்றாம் தரப்பு செயலிகளை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பித்து, சில பிழைகளை சரிசெய்து ஒட்டுமொத்த கணினி ஸ்திரத்தன்மையை மேம்படுத்தியுள்ளது. மேலும், இந்த அப்டேட் ஏர்டெல் மற்றும் ஜியோ VoWiFi அழைப்பு அம்சத்திற்கும் ஆதரவைக் கொண்டுவருகிறது.
புதிய மென்பொருள் அப்டேட் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டதாகும், இது ஆரம்பத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு தோராயமாக வெளியேற்றப்படும் என்பதை நினைவில் கொள்க. சிக்கலான பிழைகள் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர் சில நாட்களில் ஒரு பரந்த வெளியீடு தொடங்கும். ஒருமுறை, சிக்கலான பிழைகள் எதுவும் காணப்படவில்லை, வரவிருக்கும் நாட்களில் முழு வெளியீடு முடிக்கப்படும். இருப்பினும், OTA அப்டேட் அதன் சொந்தமாக வரும் வரை நீங்கள் காத்திருக்க முடியாவிட்டால், நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று, Realme X-க்கான அப்டேட்டை மேனுவலாக பதிவிறக்கலாம்.
டூயல்-சிம் (நானோ) Realme X இந்தியாவில் அதன் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.16,999-யில் இருந்து தொடங்குகிறது. அதன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.19,999-யாக விலையிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Polar White மற்றும் Space Blue ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
Realme X, 19.5:9 aspect ratio மற்றும் Gorilla Glass 5 பாதுகாப்புடன் 6.53-inch full-HD+ (1080x2340 pixels) AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த பேனல் அங்கிகாரத்திற்காக in-display fingerprint சென்சாரையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 710 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 4GB அல்லது 8GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டும், 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இந்த போன் ColorOS 6 அடிப்படையிலான Android 9 Pie-யால் இயக்கப்படுகிறது. ஹூட்டின் கீழ், VOOC ஃபளாஷ் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 3,765mAh பேட்டரி உள்ளது.
Realme X பின்புறத்தில் இரட்டை கேமராக்களுடன் வருகிறது, இதில் f/1.7 aperture கொண்ட 48 மெகாபிக்சல் சோனி IMX586 முதன்மை சென்சார் உள்ளது, இது f/2.4 aperture உடன் 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் உதவுகிறது. இந்த போன், f/2.0 aperture உடன் 16 மெகாபிக்சல் பாப்-அப் செல்பி கேமராவுடன் வருகிறது.
போனின் இணைப்பு விருப்பங்களில் dual 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். பிரத்யேக ஆடியோ மோட்கள், அதாவது சினிமா மோட், விளையாட்டு முறை மற்றும் இசை முறை ஆகியவற்றுடன் டால்பி அட்மோஸ் சரவுண்ட் ஒலி தொழில்நுட்பம் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்