8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு ரியல்மீ X ஸ்மார்ட்போன் மட்டுமே ஸ்பைடர்-மேன் வெர்சன் கொண்டு விற்பனையாகவுள்ளது.
Photo Credit: Weibo
ஸ்பைடர்-மேன் வெர்சன் கொண்ட ரியல்மீ X ஸ்மார்ட்போன்
ரியல்மீ நிறுவனம், தனது ரியல்மீ X ஸ்மார்ட்போனின் ஸ்பைடர்-மேன்: பார் ஃப்ரம் ஹோம் (Spider-Man: Far From Home) சிறப்பு பத்திப்பை சீனாவில் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. சோனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ரியல்மீ நிறுவனம், 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போனை சீனாவில் ஜூலை 9 அன்று அறிமுகப்படுத்தப்போவதாக கூறியுள்ளது. ரியல்மீ இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மாதவ் சேத், இந்த ரியல்மீ X-ஸ்பைடர்-மேன் வெர்சன் ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்பைடர்-மேன் வெர்சன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.
சீனாவில் இந்த 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு ரியல்மீ X-ன் ஸ்பைடர்-மேன் வெர்சன் ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலை 9 அன்று காலை 10 மணிக்கு துவங்கும் என அறிவித்துள்ளது.
ரியல்மீ X: விலை!
மொத்தம் மூன்று வகைகளை கொண்டுள்ளது இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போன். அதில் 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ரியல்மீ X 1,499 யுவான்கள் (15,000 ரூபாய்) என்ற விலையில் விற்பனையாகிறது. 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு என்ற ரியல்மீ X ஸ்மார்ட்போனின் வகைகள் 1,599 யுவான்கள் (16,100 ரூபாய்), 1,799 யுவான்கள் (18,100 ரூபாய்) என்ற விலையில் விற்பனையாகிறது. இவற்றில் 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு ரியல்மீ X ஸ்மார்ட்போன் மட்டுமே ஸ்பைடர்-மேன் வெர்சன் கொண்டு விற்பனையாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மீ X: சிறப்பம்சங்கள்!
ஆண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டுள்ள இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போனின் திரை 6.53-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை அளவு, 19.5:9 திரை விகிதம் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இதன் பின்புறத்தில், 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா என இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போன் 3,765mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v5.0 ஆகிய வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Nord Buds 3r Gets Jade Mist Colour Variant in India: Price, Specifications