இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ரியல்மி UI 2.0 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்
ரியல்மி நிறுவனம் நாளை புதிதாக நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.
ரியல்மி நிறுவனம் கடந்த 2 மாதங்களாகவே தொடர்ந்து பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. 1000 ரூபாய் வித்தியாசத்தில் பட்ஜெட் விலை முதல் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் வரை பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது புதிதாக ரியல்சி நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நாளை செப்டம்பர் 21 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ரியல்மி UI 2.0 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனைப் பற்றிய சில விவரங்களும் கசிந்துள்ளன.
அதன்படி, ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் - 64 ஜிபி மெமரி, 4ஜிபி ரேம் -128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்டுகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரியல்மி நார்சோ 20A ஸ்மார்ட்போன் சற்று குறைந்த விலையில், அதற்கு ஏற்ப ரேம் தரத்துடன் அறிமுகமாகலாம். அதாவது 3ஜிபி ரேம் - 32ஜிபி மெமரி, 4ஜிபி ரேம் - 64ஜிபி மெமரி ஸ்டோரேஜ் வேரியண்டுகளில் ரியல்மி நார்சோ 20 A அறிமுகமகலாம்.
இதேபோல் ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் 6ஜிபி ரேம் - 64ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் 128ஜிபி என இரு வேரியண்டுகளில் அறிமுகமாகலாம். இது மற்ற சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விட சற்று விலை அதிகமானதாக இருக்கும்.
Should the government explain why Chinese apps were banned? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S26 Series to Offer Built-In Support for Company's 25W Magnetic Qi2 Charger: Report
Airtel Discontinues Two Prepaid Recharge Packs in India With Data Benefits, Free Airtel Xtreme Play Subscription
Samsung Galaxy Phones, Devices Are Now Available via Instamart With 10-Minute Instant Delivery