ரியல்மி 1-ஐ போல் ஹீலியோ p60 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது
ஆண்டுராய்டு ஓரியோ 8.1-ல் இயங்கும் ரியல்மி 2 குறித்து கீக் பெஞ்ச் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற வலைதளமான கீக் பெஞ்ச் வலைதளத்தில், மாடல் பெயர் குறிப்பிடப்படாத ரியல்மி ஸ்மார்ட்போன் குறித்து பதிவிடப்பட்டுள்ளது. சீன தயாரிப்பு நிறுவனமான ரியல்மியின் அடுத்த ஸ்மார்ட்போன் குறித்து தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த போனிலும் முந்தைய மாடலான ரியல்மி 1-ஐ போல் ஹீலியோ p60 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அடுத்தடுத்து 4 ஸ்மார்டபோன்களை தன்வசம் கொண்டுள்ள ரியல்மி நிறுவனம், அதில் ஒன்றில் மட்டும் மீடியாடெக் பிராசஸரை பயன்படுத்தியுள்ளது. மற்ற போன்களில் ஸ்நாப்டிராகன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் எந்த மொபைலுக்கும் தற்போது வரை பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அது ரியல்மி 3 ஆக இருக்கலாம் என தெரிகிறது.
![]()
மீடியாடெக் ஹீலியோ p70 அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, உலகளவில் இந்த புதிய பிராசஸரை பயன்படுத்தும் முதல் நிறுவனம் ரியல்மி தான் என அந்நிறுவனம் அறிவித்தது. இதனிடையே RMX1833 மாடல் எண் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் குறித்து புகழ்பெற்ற வலைதளமான கீக் பெஞ்ச் வலைதளத்தில், ஆக்டாகோர் 12nm மீடியாடெக் ஹீலியோ p60 பயன்படுத்தப்பட்டுள்ள முதல் ரியல்மி போன் என பதிவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல் ரியல்மி நிறுவனமானது ரியல்மி 2, ரியல்மி c1, ரியல்மி 2 ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்நாப்டிராகன் பிராசஸரை பயன்படுத்தி வருகிறது.
இந்த மீடியாடெக் ஹீலியோ p60 பிராசஸர் தவிர்த்து, கீக் பெஞ்ச் வலைதளமானது வரவுள்ள ஒரு சில ரியல்மி ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் குறித்தும் பட்டியலிட்டுள்ளது. அந்த ஸ்மார்ட்போனானது 4ஜிபி ரேம் மற்றும் ஆண்டுராய்டு ஓரியோ 8.1-ல் இயங்குகிறது என தெரிகிறது.
பெஞ்ச் மார்க் பட்டியல்படி, ரியல்மி ஸ்மார்ட்போன் சிங்கிள் கோரில் 1560 ஸ்கோர் செய்துள்ளது. மல்டி கோர் செயல்பாட்டில் 5926 ஸ்கோர் செய்துள்ளது. ஒப்பிட்டு பார்க்கையில், 793 சிங்கிள் கோர் மற்றும் 3,882 மல்டிகோர் செயல்பாட்டை கொண்ட ரியல்மி 2-வை விட இது அதிகாமானது என தெரியவந்துள்ளது.
அடுத்தடுத்து வர இருக்கும் ரியல்மி ஸ்மார்ட்போன்களில், 5v4A சார்ஜிங் சப்போர்ட் கொண்ட ஒப்போ வோக் சார்ஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என ரியல்மி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்துள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Microsoft CEO Satya Nadella Suggests Next-Gen Xbox Will Be Windows PC and Console Hybrid