Realme C3 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், போனின் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு மற்றும் 5,000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன் பிளிப்கார்ட், ரியல்மே.காம் வழியாக விற்பனை செய்யப்படும், விரைவில் இந்தியா முழுவதும் ஆஃப்லைன் கடைகள் மூலம் கிடைக்கும்.
இந்தியாவில் Realme C3-யின் 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.6,999-யாகவும், அதன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.7,999-யாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் Blazing Red மற்றும் Frozen Blue கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இது பிப்ரவரி 14 முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மே.காம் வழியாக விற்பனைக்கு வர உள்ளது, முதல் விற்பனை மதியம் 12 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது விரைவில் ஆஃப்லைன் கடைகள் வழியாக கிடைக்கும்.
Realme C3-ன் அறிமுக சலுகைகளில் ரூ. 7,550 மதிப்புள்ள ஜியோ பலன்கள், பிளிப்கார்ட்டில் முதல் விற்பனையானது குறைந்தபட்சம், எந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்சேஞிலும் ரூ.1,000 தள்ளுபடி ஆகியவை அடங்கும்.
டூயல்-சிம் (நானோ) Realme C3, Realme UI உடன் வ் 10-ல் இயங்குகிறது. இது 89.8 percent screen-to-body ratio மற்றும் Corning Gorilla Glass 3 protection உடன் 6.5-inch HD+ (720x1600 pixels) waterdrop notch டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு 12nm MediaTek Helio G70 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்குகிறது. இதனை பிரத்யேக microSD card slot வழியாக (256GB வரை) விரிவாக்கம் செய்யலாம்.
Realme C3-யில் இரட்டை கேமரா அமைப்பு செங்குத்தாக சீரமைக்கப்பட்டு பின் பேனலின் மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ளது. இது f/1.8 aperture மற்றும் 1.25μm ultra-large single-pixel area உடன் 12-மெகாபிக்சல் பிரதான சென்சார் மற்றும் f/2.4 aperture உடன் 2-மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்புகளில் HDR, Nightscape, Chroma Boost, Slo mo (480p, 120fps), PDAF, Portrait mode மற்றும் பல உள்ளன. முன்புறத்தில், 5-megapixel AI முன் கேமரா உள்ளது. இது HDR, AI Beautification, panoramic view மர்தும் time-lapse போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
Realme C3, 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது, இது 43.9 மணிநேர பேச்சு நேரம், 10.6 மணிநேர பப்ஜி, 20.8 மணிநேர ஆன்லைன் மூவி பிளேபேக் மற்றும் 727.7 மணிநேர காத்திருப்பு நேரம் வழங்கப்படுகிறது. இந்த போன் 164.4x75x8.95mm அளவீட்டையும் 195 கிராம் எடையையும் கொண்டதாகும். இணைப்பு விருப்பங்களில் 2.4GHz Wi-Fi, USB OTG, Micro USB port, VoLTE, Bluetooth 5, GPS/Beidou/ Galileo/Glonass/A-GPS, மற்றும் பல உள்ளன. ஆன்போர்டு சென்சார்களில் magnetic induction sensor, light sensor, proximity sensor, gyro-meter மற்றும் accelerometer ஆகியவை அடங்கும்.
புதிய ரியல்மி போன் dual mode music share, focus mode, three-finger screenshot மற்றும் personal information protection போன்ற அம்சங்களுடன் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்