Realme-யின் அடுத்த ஸ்மார்ட்போனான Realme C2s அறிமுகமாகியுள்ளது. இது ஒரே மாதிரியான விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பைக் கொண்ட Realme C2-வின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். Realme C2s இதுவரை தாய்லாந்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Realme C2s-ன் ஒரே 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை THB 1,290 (இந்திய மதிப்பில் ரூ. 3,000)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் இப்போது தாய்லாந்தில் உள்ள 7-Eleven சில்லறை கடைகளில் இருந்து கிடைக்கிறது. Realme C2s உடன் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு THB 299 (இந்திய மதிப்பில் ரூ .700) விலை கொண்ட ஒரு ஜோடி wired ஹெட்ஃபோன்களையும் ரியல்மி வழங்குகிறது.
டூயல்-சிம் Realme C2s, ColorOS 6.1 உடன் Android Pie-ல் இயங்குகிறது. புதிய Realme போன் 19.5:9 aspect ratio உடன் 6.1-inch HD+ (720x1560 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக Corning Gorilla Glass 3 பொருத்தப்பட்டுள்ளது. இது 3GB RAM 32GB இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு, octa-core MediaTek Helio P22 SoC-யால் இயக்கப்படுகிறது. மேலும், இதனை microSD card வழியாக (256GB வரை) விரிவாக்கம் செய்யலாம்.
Realme C2-வைப் போன்ற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில், f/2.2 lens உடன் 13-megapixel பிரதான கேமரா மற்றும் f/2.4 aperture உடன் 2-megapixel depth சென்சார் ஆகியவை அடங்கும். முன்புறத்த்இல் f/2.0 lens உடன் 5-megapixel செல்ஃபி கேமரா உள்ளது. Realme C2s, 4,000mAh பேட்டரியுடன் வருகிறது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்