ரியல்மி 7 ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதியும், ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 14 ஆம் தேதியும் விற்பனைக்கு வருகிறது.
ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் சூப்பர் அமோலேட் டிஸ்பிளே உள்ளது
இந்தியாவில் ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ரியல்மி நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்களை வரிசையாகக் களம் இறக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ என இரண்டு புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 8 ஜிபி வரையிலான ரேம் ரெம் கொண்டுள்ளது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கரகள்,சூப்பர் அமோலேட் டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ரியல்மி 7 ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதியும், ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 14 ஆம் தேதியும் விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் இதனை ரியல்மி மற்றும் ஃபிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
அடிப்படையாக ரியல்மி 7 ஸ்மார்ட்போன் 14,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி உள்ளது. இதே போன்று 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 16,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனைப் பொறுத்தவரையில், 6ஜிபி ரேம்,128ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 19,999 ரூபாய்க்கும், 8ஜிபி ரேம்,256ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 21,999 ரூபாய்க்கும் அறிமுகமாகியுள்ளது.
.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
டிஸ்பிளே: 6.5 இன்ச், பஞ்ச் ஹோல் கேமரா
பிராசசர்: மீடியாடெக் ஹீலியோ G95
பேட்டரி: 5,000mAh
சார்ஜ்: 30W டார்ட் சார்ஜ், 15W USB சார்ஜ்
கேமரா:
பிரைமரி கேமரா: 64MP சோனி IMX682, செகன்டரி கேமரா: 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள், 2MP மோனோகுரோம் கேமரா, 2MP மேக்ரோ கேமரா
முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
டிஸ்பிளே: 6.4 இன்ச், பஞ்ச் ஹோல் கேமரா
பிராசசர்: குவால்காம் ஸ்நாப்டிராகன் 720G SoC
பேட்டரி: 4500mAh
சார்ஜ்: 30W டார்ட் சார்ஜ், 15W USB சார்ஜ்
கேமரா:
பிரைமரி கேமரா: 64MP சோனி IMX682, செகன்டரி கேமரா: 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள், 2MP மோனோகுரோம் கேமரா, 2MP மேக்ரோ கேமரா
முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமரா உள்ளது.
![]()
ரியல்மி 7 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் அளவிலான டிஸ்பிளே உள்ளது
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Neutrino Detectors May Unlock the Search for Light Dark Matter, Physicists Say
Uranus and Neptune May Be Rocky Worlds Not Ice Giants, New Research Shows
Steal OTT Release Date: When and Where to Watch Sophie Turner Starrer Movie Online?
Murder Report (2025): A Dark Korean Crime Thriller Now Streaming on Prime Video