ரியல்மி 6i இறுதியாக மியான்மரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் ரியல்மி 5i-யின் தொடராக உள்ளது. இதன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு மற்றும் ஒற்றை செல்ஃபி ஷூட்டர் உள்ளது. இந்த போன் இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது மற்றும் White Milk மற்றும் Green Tea என இரண்டு கலர்களில் வருகிறது.
Realme 6i இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது, இதில் 3 ஜிபி + 64 ஜிபி மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி ஆகியவை அடங்கும். இதன் அடிப்படை மாடலின் விலை MMK 249,900 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,000), டாப்-எண்ட், வேரியண்ட்டின் விலை MMK 299,900 (இந்திய மதிப்பில் சுமார் ரூ 15,600) ஆகும். ரியல்மி 6i மார்ச் 18 முதல் மார்ச் 26 வரை முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயாராக இருக்கும் என்று ரியல்மி மியான்மர் Facebook page தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சந்தைகளில் கிடைப்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
டூயல்-சிம் (நானோ) ரியல்மி 6i, Realme யுஐ உடன் Android 10-ல் இயக்குகிறது. இது 6.5 அங்குல முழு எச்டி திரை (720 x 1600 பிக்சல்கள்) மற்றும் 20: 9 என்ற விகிதத்தைக் கொண்டுள்ளது. ரியல்மி 6i ஒரு மீடியாடெக் ஹீலியோ G80 SoC-யால் இயக்கப்படுகிறது. கிராபிக்ஸ் மாலி G52 கிராபிக்ஸ் செயலாக்க பிரிவு (GPU) கையாளுகிறது. இது இரண்டு ரேம் ஆப்ஷன்களில் வருகிறது - 3 ஜிபி மற்றும் 4 ஜிபி.
ரியல்மி 6i பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் முதன்மை f/1.8 aperture உடன் 48 மெகாபிக்சல் சென்சார் கொண்டது. இரண்டாம் நிலை 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், மூன்றாம் நிலை கருப்பு மற்றும் வெள்ளை உருவப்பட லென்ஸ் ஆகும். பின்புறத்தில் மேக்ரோ லென்ஸும் உள்ளது. மறுபுறம், முன் கேமரா, ஒற்றை 16 மெகாபிக்சல் ஷூட்டர், f/2.0 aperture உடன் வாட்டர் டிராப் நாட்சில் வைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது, அதாவது 64 ஜிபி மற்றும் 128 ஜிபி, மைக்ரோ எஸ்.டி வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்க முடியும். இணைப்பிற்காக, USB Type-C port, Wi-Fi, Bluetooth, GPS/A-GPS மற்றும் 3.5mm headphone jack உடன் வருகிறது.
ரியல்மி 6i ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும், இது 18W விரைவான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போன் 164.40x75.40x9.00 மிமீ அளவு மற்றும் 195 கிராம் எடையுடன் வருகிறது.
Is Redmi Note 9 Pro the new best phone under Rs. 15,000? We discussed how you can pick the best one, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்