ரியல்மி 6i ஸ்மார்ட்போன் ஜூலை 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது
Photo Credit: Flipkart
இந்தியாவில் ரியல்மி 6i ஸ்மார்ட்போன் வரும் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு முன்பு வெளியான ரியல்மி 6 ஸ்மார்ட்போனை விட இதில் என்ன சிறப்புகள் கூடுதலாக இருக்கும், இதன் விலை என்ன என்பது குறித்த விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
ரெட்மிக்குப் போட்டியாக ரியல்மியும் பட்ஜெட் விலையில் பல வசதிகளுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரியல்மி நிறுவனம் தற்போது ஹீலியோ G90T பிராசசருடன் கூடிய ரியல்மி 6i ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ரியல்மி தளத்திலும், ஃபிளிப்கார்ட் தளத்திலும் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், ரியல்மி இந்தியாவின் சிஇஓ மாதவ், தனது டுவிட்டர் பக்கத்திலும் டுவிட் செய்துள்ளார். அதில் அவர், ரியல்மி ஸ்மார்ட்போன் சீரிஸ் மற்றொரு பவர்புல் ஸ்மார்ட்போனுடன் விரிவடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதாவது அதிவேகமாகன பிராசசர் கொண்டு ரியல்மி 6i ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ G90T SoC பிராசசர் என்பது கேமிங் ஸ்மார்ட்போன்களுக்காகவே உரித்தான பிராசசர் ஆகும்.
ரியல்மி 6i தோற்றத்தைப் பார்க்கும் போது, இதில் ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே, பின்புறத்தில் நான்கு கேமராக்கள் (குவாட் செட்டப்) உள்ளது. மேலும், ஜூலை 24 ஆம் தேதி, மதியம் 12 மணியளவில் ரியல்மி 6i ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரத்தில் வேறு எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
விலை நிர்ணயம்:
ஐரோப்பாவில் ரியல்மி 6s ஸ்மார்ட்போன் EUR 199க்கு (இந்திய மதிப்பில் 16,500 ரூபாய்) அறிமுகம் செய்யப்பட்டது. அதை வைத்துப் பார்க்கும் போது, இந்தியாவில் ரியல்மி 6i ஸ்மார்ட்போனின் விலை கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய் வரையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி 6i இல் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
இந்தியாவில் ரியல்மி 6i ஸ்மார்ட்போன் என்பது ரியல்மி 6s இன் புதுப்பிக்கப்பட்டதாக இருக்கலாம். ரியல்மி 6s ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.5 இன்ச் டிஸ்பிளே, 90Hz ரெவ்ரெஷ் ரேட், 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ், விரல் ரேகை சென்சார், குவாட் கேமரா (48MP+ 8MP+ 2MP+ 2MP), செல்பி கேமரா (16MP), பேட்டரி சக்தி 4,300mAh ஆகியவை உள்ளன. ரியல்மி 6s ஸ்மார்ட்போனின் இதே அம்சங்கள் தற்போது இந்தியாவில் வெளியாகவுள்ள ரியல்மி 6i ஸ்மார்ட்போனிலும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Poco M2 Pro: Did we really need a Redmi Note 9 Pro clone? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.