ரியல்மி 6i ஸ்மார்ட்போன் இரண்டு வேரியன்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளன
இதில் மீடியாடெக் ஹீலியோ G90T SoC பிராசசர், 4,300mAh சக்தி கொண்ட பேட்டரி ஆகியவை உள்ளன
அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 6i ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ரியல்மி தரப்பில் கடந்த மாதம் ரியல்மி 6i என்ற பெயரில் அட்டகாசமான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மீடியாடெக் ஹீலியோ G90T SoC பிராசசர், 4,300mAh சக்தி கொண்ட பேட்டரி ஆகியவை உள்ளன. ரியல்மி 6i ஸ்மார்ட்போன் முதன்முதலாக இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. ஃபிளிப்கார்ட் மற்றும் realme.com ஆகியவற்றில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது
.
விலை:
ரியல்மி 6i ஸ்மார்ட்போன் இரண்டு வேரியன்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளன. 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய் என்றும், 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 14,999 ரூபாய் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எக்லிப்ஸ் பிளாக், லூனார் வயிட் ஆகிய நிறங்களில் உள்ளன.
ரியல்மி 6i சிறப்பம்சங்கள்:
திரை: 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி, 90Hz ரெவ்ரேஷ் ரேட்
பிராசசர்: மீடியாடெக் ஹீலியோ G90T SoC
எக்ஸ்பேண்டபிள் மெமரி: 256 ஜிபி
கேமரா:
பின்பக்கத்தில் நான்கு (குவுாட்) கேமராக்கள் உள்ளன. 48MP பிரைமரி சென்சார், 8MP, 2MP, 2MP என கேமராக்கள் உள்ளன. இதே போல், முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது.
இவை தவிர 4,300 mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 30W சார்ஜர், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், டைப் சி போர்ட், பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார் ஆகியவை உள்ளன.
.
Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999