ஜனவரி 9-ல் வெளியாகிறது Realme 5i...!

2020-ஆம் ஆண்டில் உற்பத்தியாளரிடமிருந்து வரும் முதல் ஸ்மார்ட்போனாக Realme 5i இருக்கும்.

ஜனவரி 9-ல் வெளியாகிறது Realme 5i...!

Realme 5 சீரிஸ்களுக்கு, Realme 5i சமீபத்திய சேர்க்கையாக இருக்கும்

ஹைலைட்ஸ்
  • Realme 5i ஜனவரி 9-ஆம் தேதி அறிமுகமாகும்
  • இது Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது
  • Realme 5i குவாட் கேமரா அமைப்பை பேக் செய்கிறது
விளம்பரம்

சமீபத்தில் Realme 5i பற்றிய செய்திகளில் வந்துள்ளது. வைஃபை சான்றிதழ் வலைத்தளங்களில் காணப்படுவதிலிருந்து, கீக்பெஞ்சில் மதிப்பெண்களை பதிவிடுவது வரை, Realme 5i சந்தைக்கு வருவதைக் குறிக்கிறது. ரியல்மியின், வியட்நாம் பேஸ்புக் பக்கத்திலிருந்து ஒரு பதிவை ஸ்மார்ட்போனுக்காக ஜனவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டதை கிண்டல் செய்தது. இப்போது, ​​Realme 5i ஜனவரி 9-ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு தொடங்கப்படும் என்று ஒரு ட்வீட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ரியல்மி முதலில் அதை அறிமுகப்படுத்தவுள்ள சந்தையைப் பற்றி குறிப்பிடவில்லை.

Realme 5i-யின் வெளியீடு ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறும் என்றும், இந்நிகழ்ச்சி, நிறுவனத்தின் சமூக சேனல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்றும் ரியல்மி மொபைல்ஸ் ட்வீட் செய்துள்ளது. ட்வீட் ஒரு மைக்ரோசைட்டையும் சுட்டிக்காட்டுகிறது, இது போனைப் பற்றிய மேலும் சில விவரங்களை வெளிப்படுத்துகிறது. Realme இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத்தின் (Madhav Sheth) ட்வீட்டின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 9-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி.

இந்தியாவில் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக பிளிப்கார்ட்டிலும் Realme 5i கிண்டல் (teased) செய்யப்படுகிறது. சுவாரஸ்யமாக, ரியல்மி வியட்நாம் ஜனவரி 6-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுவதை மீண்டும் வலியுறுத்தும், புதிய Facebook post வெளியிட்டுள்ளது, மேலும் நீல மற்றும் பச்சை கலர் ஆப்ஷன்கலையும் வெளிப்படுத்தியுள்ளது. எனவே, இந்தியா அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக ஸ்மார்ட்போன் இன்று வியட்நாமில் அறிமுகம் செய்யப்படலாம்.

குறிப்பிட்டுள்ளபடி, Realme 5i-யின் சில விவரங்கள் மைக்ரோசைட்டில் வெளிவந்தன - 5,000mAh பேட்டரி, குவாட் ரியர் கேமரா அமைப்பு (primary lens, ultra wide-angle lens, portrait lens மற்றும் macro lens), 6.5-inch mini-drop டிஸ்ப்ளே மற்றும் 'சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் பிராசசர்' இருப்பது. இந்த வார இறுதியில் இந்திய வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளதால், அதன் இந்தியா விலை மற்றும் கிடைக்கும் தன்மைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.

realme 5i india launch vietnam teaser Realme 5i India Launch Teased

Realme 5i, பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பை பேக் செய்யும்

இந்த ஸ்மார்ட்போன் RMX2030 மாடல் எண்ணைக் கொண்டுள்ளது. இது Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது, மேலும் 4GB RAM-ஐக் கொண்டுள்ளது. Geekbench முடிவு, இந்த ஸ்மார்ட்போன் Android 9 Pie-க்கு மேல் ColorOS 6-ல் இயங்கும் என்பதைக் குறிக்கிறது.

Realme 5i, waterdrop notch உடன் 6.5-inch HD+ டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். பின்புறத்தில், 12-megapixel primary shooter, 8-megapixel ultra-wide-angle கேமரா, 2-megapixel depth சென்சார் மற்றும் 2-megapixel macro கேமரா ஆகியவை குவாட் கேமரா அமைப்பில் இருக்கும். இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

Realme 5 சீரிஸ் தற்போது Realme 5, Realme 5s மற்றும் Realme 5 Pro ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், இந்த சீரிஸில் Realme 5i சேர்க்கப்படும். நிறுவனம் சமீபத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme 5 சீரிஸ் உலகளவில் 5.5 மில்லியன் யூனிட்டுகளை கடக்க முடிந்தது என்று இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் (Madhav Sheth) ட்வீட் செய்தார்.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent build quality
  • Very good battery life
  • Good daylight camera performance
  • Dedicated microSD card slot
  • Bad
  • No fast charging
  • Below average low-light camera performance
Display 6.52-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9
Resolution 720x1600 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Game of Thrones ஃபேன்ஸ், ஏத்துங்க! Realme 15 Pro 5G GOT Edition Rs. 41,999ல வந்திருக்கு
  2. WhatsApp Status Questions அம்சம்: Android Beta-வில் வெளியீடு
  3. விறுவிறுப்பான Display அனுபவத்துடன் வருகிறது Lava Shark 2. 120Hz refresh rate, 50MP camera
  4. iQOO ரசிகர்களுக்கு விருந்து! Pad 5e, Watch GT 2, TWS 5 வெளியீடு: தேதி மற்றும் Key Specs இங்கே!
  5. மோட்டோரோலா Android 16 வந்திருக்கு! Edge 60 Pro, Fusion முதல்ல அப்டேட், Notification Grouping, Instant Hotspot
  6. Lava Shark 2 வருது! பிளாக், சில்வர் கலர்ஸ், 50MP AI கேமரா உடன் கிளாஸி லுக்
  7. சாம்சங் Galaxy F36, M36-க்கு One UI 8 அப்டேட்! Android 16-ஓட வந்திருக்கு, இப்பவே செக் பண்ணுங்க
  8. Samsung ஃபோன் வாங்க சரியான நேரம்! Galaxy S24 FE உட்பட பிரீமியம் மாடல்களில் Rs. 28,000 வரை சேமிக்க வாய்ப்பு
  9. கட்டிங் எட்ஜ் All-in-One PC மாடல்களில் Rs. 24,990-லிருந்து ஆரம்பிக்கும் அதிரடி சலுகைகள்! HP, ASUS, Lenovo மாடல்களை குறைந்த விலையில்
  10. Smartwatch வாங்க சரியான நேரம்! Fossil, Amazfit, Titan வாட்ச்களில் Rs. 16,000 வரை தள்ளுபடி!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »