Realme 5 Pro இந்தியாவில் விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் Realme 5 Pro-வின் ஒவ்வொரு ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலையையும் ரூ. 1,000 குறைத்துள்ளார். புதிய விலைகள் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மே.காம் ஆகியவற்றில் பிரதிபலிக்கின்றன. Realme 5 Pro கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது போனின் முதல் விலைக் குறைப்பு ஆகும்.
இந்தியாவில் Realme 5 Pro-வின் விலை இப்போது 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 12,999-ல் இருந்து தொடங்குகிறது. 6 ஜிபி + 64 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி ஆப்ஷன்கள் முறையே ரூ. 13,999 மற்றும் ரூ. 15,999 ஆகும். Realme.com மற்றும் Flipkart-ல் புதிய விலைகளுடன் Sparkling Blue மற்றும் Crystal Green கலர் ஆப்ஷன்களில் இந்த போன் பட்டியலிடப்பட்டுள்ளது. வங்கி தள்ளுபடிகள், no-cost EMI ஆப்ஷன்கள் மற்றும் எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள் ஆகியவற்றை பிளிப்கார்ட் வழங்குகிறது. அதே நேரத்தில், Realme.com-மும் போனில் எக்ஸ்சேஞ் தள்ளுபடியை வழங்குகிறது.
டூயல்-சிம் (நானோ) Realme 5 Pro,ColorOS 6.0 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது, பாதுகாப்புக்காக Corning Gorilla Glass 3+ உடன் 6.3-inch full-HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 8GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Snapdragon 712 SoC-யால் இயக்கப்படுகிறது. புதிய Realme 5 Pro போன் 64GB மற்றும் 128GB இன்பில்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வருகிறது. இதனை microSD card வழியாக (256GB வரை) விரிவாக்கம் செய்யலாம்.
கூடுதலாக, இந்த போன் 48-megapixel முதன்மை கேமரா, f/2.25 aperture உடன் 8-megapixel ultra-wide-angle shooter, 2-megapixel macro lens மற்றும் portraits-க்கு 2-megapixel depth சென்சார் ஆகியவை அடங்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில், Realme 5 Pro, 16-megapixel செல்ஃபி கேமரா உடன் வருகிறது. Realme 5 Pro, VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,035mAh பேட்டாரியைக் கொண்டுள்ளது. அதேபோன்று rear fingerprint சென்ச்சாரும் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்