Realme 3 Pro, Realme U1 மற்றும் Realme 1 ஆகியவை புதிய மென்பொருள் அப்டேட்டுகளை பெற்றுள்ளன, அவை டிசம்பர் 2019 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டு வருகின்றன. மூன்று பட்ஜெட் ரியல்மி போன்களுக்கான சமீபத்திய அப்டேட்டுகள் பயனீட்டாளர்களை விரைவாக இருண்ட பயன்முறையில் மாற்ற அனுமதிக்கும் ஒரு மாற்றத்தையும் உள்ளடக்கியது. அறிவிப்பு மையத்தில் (notification centre) புதிய நிலைமாற்றம் உள்ளது. புதிய மென்பொருள் அப்டேட்டுகள் மூலம் பிழைத் திருத்தங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகளின் பட்டியலையும் பயனர்கள் எதிர்பார்க்கலாம். இருப்பினும், முக்கிய ஆண்ட்ராய்டு பதிப்பில் எந்த மாற்றங்களும் இல்லை, அது இன்னும் Android 9 Pie-ஆகவே உள்ளது.
ரியல்மி வலைத்தளத்தின் ஆதரவு பக்கத்தில் வழங்கப்பட்ட சேஞ்ச்லாக் படி, Realme 3 Pro-வின் சமீபத்திய மென்பொருள் அப்டேட், ஃபார்ம்வேர் பதிப்பான RMX1851EX_11.A.21 ஐக் கொண்டுவருகிறது. இதன் அளவு சுமார் 2.74 ஜிபி ஆகும்.
இந்த அப்டேட், டிசம்பர் 2019 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பேட்சை Realme 3 Pro-வுக்கு கொண்டு செல்கிறது. கூடுதலாக, இது அறிவிப்பு மையத்தில் கிடைக்கும் இருண்ட பயன்முறை மாற்றத்துடன் வருகிறது. அப்டேட்டில் flash on call அம்சமும் அடங்கும் மற்றும் கேமரா செயலி தொடர்பான சிக்கலை சரிசெய்கிறது.
Realme U1-ஐப் பொறுத்தவரை, புதிய மென்பொருள் தொகுப்பு ஃபார்ம்வேர் பதிப்பான RMX1831EX_11_C.16 ஐக் கொண்டுவருகிறது மற்றும் இது 2.06GB அளவு கொண்டது. அப்டேட்டில் டிசம்பர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு மற்றும் இருண்ட பயன்முறை மாறுதல் ஆகியவை அடங்கும் - Realme 3 Pro-வுக்கு வழங்கப்பட்ட புதிய மென்பொருளைப் போல. மேலும், Realme U1 அப்டேட், கணினியில் செயல்படுத்தப்பட்ட இருண்ட பயன்முறையில் இயங்கும், வாட்ஸ்அப் தொடர்பான சிக்கலையும் சரிசெய்கிறது.
மறுபுறம், Realme 1-க்கான புதிய அப்டேட், ஃபார்ம்வேர் பதிப்பான CPH1861EX_11_C.46 உடன் வருகிறது, இது 2.15GB அளவு கொண்டது. Realme 3 Pro மற்றும் Realme U1-ஐ எட்டும் புதுப்பிப்புகளைப் போலவே, Realme 1 அப்டேட்டிலும் டிசம்பர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு மற்றும் இருண்ட பயன்முறை மாற்று உள்ளது.
சமீபத்திய மென்பொருள் அப்டேட்டுகள் மூலம் ColorOS பதிப்பில் ரியல்மி எந்த மாற்றமும் செய்யவில்லை. புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்த பின் உங்கள் Realme 3 Pro, Realme U1 அல்லது Realme 1 தொடர்ந்து ColorOS 6.0-ஐ இயக்கும். மேலும், குறிப்பிட்டுள்ளபடி, Android Pie-ல் இருக்கும் முக்கிய ஆண்ட்ராய்டு பதிப்பில் எந்த அப்டேட்டுகளும் இல்லை.
Settings menu வழியாகச் சென்று உங்கள் ரியல்மி போனில் புதிய மென்பொருள் அப்டேட்டின் வருகையை நீங்கள் சரிபார்க்கலாம். மாற்றாக, ரியல்மி தளத்தில் வழங்கப்பட்ட ஆதரவு பக்கத்திலிருந்து சமீபத்திய தொகுப்பை பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த மாத தொடக்கத்தில், Realme U1, Realme C1, Realme 1 மற்றும் Realme 2-க்கான ColorOS 7 உடன் ஆண்ட்ராய்டு 10-ஐ வெளியிடாது என்று ரியல்மி உறுதிப்படுத்தியது. இருப்பினும், புதிய ஆண்ட்ராய்டு அனுபவத்தை அதன் பட்டியலில் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது. Realme 3 Pro, Realme XT, Realme X, and Realme 5 Pro ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்டவை அடங்கும். புதிய custom skin-ஐ Realme X2 Pro-விற்கு கொண்டு வருவதற்காக இது சமீபத்தில் இந்தியாவில் ColorOS 7 Beta Recruitment programme-ஐ தொடங்கியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்