இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோவின் சமீபத்திய மென்பொருள் அப்டேட், பயனர்களுக்காக ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்படுகிறது.
ரியல்மி 3 ப்ரோவின் சமீபத்திய அப்டேட் விளையாட்டு ஆடியோ விளைவை மேம்படுத்துகிறது
இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோவுக்கான புதிய மென்பொருள் அப்டேட்டை நிலையான சேனல் வழியாக ரியல்மி தொடங்கியுள்ளது. ரியல்மி 3 ப்ரோவின் சமீபத்திய மென்பொருள் அப்டேட் மார்ச் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு மற்றும் பல பிழைத்திருத்தங்களைக் கொண்டுவருகிறது. இந்த அப்டேட் விளையாட்டு ஆடியோ விளைவு மற்றும் கணினி சக்தி நுகர்வு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. புதிய மென்பொருள் உருவாக்கம் ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்டது, இது ரியல்மி யுஐ வி 1.0 உடன் ஜனவரி மாதத்தில் ரியல்மி 3 ப்ரோ பயனர்களுக்காக தொடங்கியது - ஆனால் இது அம்சங்களின் அடிப்படையில் புதிதாக எதையும் கொண்டு வரவில்லை.
சமீபத்திய Realme 3 Pro அப்டேட் RMX1851EX_11.C.04 என்ற உருவாக்க எண்ணைக் கொண்டுள்ளது. எந்தவொரு பெரிய சிக்கல்களும் இருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு கட்டமாக அப்டேட் வெளியிடப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, உங்கள் Realme 3 ப்ரோவில் ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட் அறிவிப்பை நீங்கள் இன்னும் பெறவில்லை என்றால், அது விரைவில் வரும். settings app-ல் போனின் மென்பொருள் அப்டேட் பகுதிக்குச் செல்வதன் மூலம் அதை மேனுவலாக சரிபார்க்கலாம். மாற்றாக, இந்த அப்டேட் ஃபைல் அதிகாரப்பூர்வ ரியல்மி அப்டேட் போர்ட்டலில் இருந்து கிடைத்தவுடன் அதை மேனுவலாக பதிவிறக்கம் செய்யலாம்.
அப்டேட் சேஞ்ச்லாக் பற்றி பேசுகையில், புதிய அம்சங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், புதிய ரியல்மி 3 ப்ரோ அப்டேட் நிறுவனம் 'துவக்க அனிமேஷன் டிஸ்பிளேவின் நிகழ்தகவு பிழை' என்றும், அப்டேட்டை இன்ஸ்டால் செய்த பின் புகைப்படங்கள் அல்லது ஸ்கிரீன் ஷாட்களைக் காண்பிப்பதைத் தடுக்கும் மற்றொரு சிக்கலை சரிசெய்கிறது. மேலும், கணினி நினைவக கசிவு அல்லது மூன்றாம் தரப்பு செயலிகளின் இன்ஸ்டாலேஷன் காரணமாக எழும் UI முடக்கம் சிக்கல்களும் தீர்க்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ ரியல்மி சமூக மன்றத்தில் ரியல்மி 3 ப்ரோவுக்கான RMX1851EX_11.C.04 அப்டேட்டைன் முழு சேஞ்ச்லாக்கையும் நீங்கள் படிக்கலாம்.
Is Redmi Note 9 Pro the new best phone under Rs. 15,000? We discussed how you can pick the best one, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999