சமீபத்திய #AskMadhav எபிசோடில், ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் (Madhav Sheth), போன்களுக்கு குறைந்தது ஒரு பெரிய ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு பேட்ச்கள் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் என்று கூறினார். இதைக் கேட்ட பயனர்கள், Realme X மற்றும் Realme Pro சீரிஸ்க்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறுமா இல்லையா என்பதை உறுதிப்படுத்த ட்விட்டருக்கு அழைத்துச் சென்றனர். இதற்கு, ரியல்மே இந்தியா சி.எம்.ஓ பிரான்சிஸ் வாங் (Francis Wang), Realme X சீரிஸ் மற்றும் Realme Pro சீரிஸ் இரண்டுமே இரண்டு பெரிய ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளுக்கு தகுதியுடையவை என்பதை உறுதிப்படுத்தின. மேலும், அவை ஆண்ட்ராய்டு 11-ஐயும் பெறும்.
மென்பொருள் அப்டேட்டுகள் தொடர்பான அனைத்து குழப்பங்களையும் நீக்க, ட்விட்டரில் பயனர்களின் கேள்விகளுக்கு வாங் (Wang) பதிலளித்தார். Realme X சீரிஸ் போன்கள் ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டையும் பெறும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார் - அதாவது Realme X2 Pro, Realme X2, Realme XT மற்றும் Realme X போன்கள் இரண்டு பெரிய ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளை பெறும். Realme XT ஏற்கனவே ஆண்ட்ராய்டு 10 அப்டேடை பெறத் தொடங்கியுள்ளது. மேலும், Realme X போன் அடுத்த மாதம் அப்டேட்டை பெற உள்ளது. Realme X2 மற்றும் Realme X2 Pro போன்கள் மார்ச் 2020-ல் அப்டேட்டை பெறும். இந்த போன்கள் இப்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டுகளையும் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உறுதிப்படுத்தலுக்கு, மற்றொரு பயனர் Pro சீரிஸில் இரண்டு பெரிய ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளை பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். Realme 2 Pro-வுக்கு இரண்டு முக்கிய அப்டேட்டுகள் கிடைத்தன. இதற்கு வாங் (Realme 2 Pro) ஒப்புக் கொண்டு, “ஹாஹா. சரி சரி. ஏற்கிறேன். என்றார். Pro சீரிஸ் உறுதிப்படுத்தப்பட்டது. எதையும் தவறவிடாமல் இருக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். ”இந்த தெளிவற்ற உறுதிப்படுத்தல் ஏதேனும் எடையைக் கொண்டிருந்தால், Realme 3 Pro மற்றும் Realme 5 Pro எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டியும் பெறும் என்று நாம் கருதலாம்.
ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பொறுத்தவரை, Realme 3 Pro ஏற்கனவே அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் Realme 5 Pro பிப்ரவரியில் பெற திட்டமிடப்பட்டுள்ளது. Realme 3 மற்றும் Realme 3i போன்ற பிற போன்கள் ஏப்ரல் மாதத்தில் அப்டேடைப் பெறும். மேலும், Realme 5 மற்றும் Realme 5s ஆகியவை மே மாதத்தில் அப்டேட் பெறும். Realme 2 Pro ஜூன் மாதத்தில் அப்டேட்டைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் [Realme C2] (https://www.gadgets360.com/realme-c2-13026, Q3 2020-ல் அதைப் பெறும்.
குழப்பம் தொடங்கியது, ஏனெனில் ஷெத் தனது AskMadhav எபிசோடில் ரியல்மி போன்கைள், குறைந்தது ஒரு பெரிய ஆண்ட்ராய்டு அப்டேட்டைப் பெறுவார் என்று கூறினார். இது Realme 1, Realme C1 மற்றும் Realme U1 போன்ற போன்களுக்கு பொருந்தும், X சீரிஸ் மற்றும் Pro சீரிஸ் போன்களுக்கு அல்ல என்று வாங் (Wang) குறிப்பிடுகிறார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்