Realme-யின் அடுத்த நம்பர் சீரிஸ் மாடலான Realme 16 Pro-வின் முழு விவரங்களும் TENAA சான்றிதழ் தளத்தில் கசிந்துள்ளது
Photo Credit: Realme
Realme 16 Pro முக்கிய அம்சங்கள்: 7000mAh, 200MP, 144Hz, 80W charging
நம்ப முடியாத வேகத்துல புது போன்களை ரிலீஸ் பண்ணிக்கிட்டு இருக்கிற Realme கம்பெனி, தன்னோட அடுத்த நம்பர் சீரிஸ் மாடலான Realme 16 Pro-வோட முழு விவரங்களும் சைனாவோட TENAA சான்றிதழ் தளத்துல (Certification Site) லீக் ஆகியிருக்கு. இந்த ஸ்பெக்ஸை பார்த்தா, Realme உண்மையிலேயே பெரிய போட்டியை உருவாக்கப் போறாங்கன்னு தெரியுது.அதிவேக சார்ஜிங் உடன் 7000mAh பேட்டரி:இந்த புதிய போனில் நாம எதிர்பார்க்காத பெரிய விஷயம் என்னன்னா, இதோட பேட்டரி தான். TENAA லிஸ்டிங் படி, இதில் 6,830mAh என்ற ரேடட் கெப்பாசிட்டி இருக்கு. ஆனா மார்கெட்டிங்ல இது கன்ஃபார்மா 7,000mAh Battery-ன்னு தான் சொல்லப்படும். இதுவரைக்கும் இந்த கிளாஸ் போன்கள்ல 5000mAh தான் இருந்துச்சு. ஆனா, இப்போ 7000mAh பேட்டரியோட இந்த போன் வருவது பெரிய விஷயம்தான். ஆச்சரியம் என்னன்னா, இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும், இந்த போன் வெறும் 7.75mm தடிமனும், 192 கிராம் எடையும் கொண்டதுன்னு TENAA லிஸ்டிங் சொல்லியிருக்கு. இது ஒரு உண்மையிலேயே பெரிய சாதனை தான். இந்த பெரிய பேட்டரிக்கு சப்போர்ட் பண்ண 80W Charging வசதியும் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
கேமரா பிரியர்களுக்கு இது ஒரு பெரிய விருந்து. இந்த போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு தான் இருக்கப் போகுது. இதுல பிரைமரி சென்சாரா, மாஸான 200MP Camera சென்சார் கொடுத்திருக்காங்க. கூடவே, 8MP அல்ட்ரா-வைட் சென்சாரும் இருக்கு. செல்பிக்காக, முன்பக்கத்துல சக்திவாய்ந்த 50MP Selfie Camera இருக்கு. இது செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு தரமான படங்களை எடுக்கும். டிஸ்பிளேயைப் பார்த்தா, இது 6.78-இன்ச் சைஸ் கொண்ட பெரிய AMOLED திரையைக் கொண்டிருக்கு. இது 1.5K ரெசல்யூஷனை (2772 x 1272 pixels) கொடுக்கும். கூடவே, ஸ்மூத் அனிமேஷன்களுக்காக, 144Hz Display ரெஃப்ரெஷ் ரேட் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
இந்த போனில் 2.5GHz Octa-core ப்ராசஸர் இருக்கும்னு TENAA லிஸ்டிங்ல சொல்லியிருக்காங்க. இது ஒரு சக்திவாய்ந்த Snapdragon அல்லது MediaTek சிப்பாக இருக்க வாய்ப்பு இருக்கு. மேலும், இது லேட்டஸ்ட் Android 16 அடிப்படையிலான Realme UI 7-ல் இயங்கும். ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைப் பார்த்தா, சைனால 16GB RAM மற்றும் 1TB ஸ்டோரேஜ் வரைக்கும் வருது. இந்தியால 12GB RAM, 512GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் வெளியாகும்னு எதிர்பார்க்கலாம். டிசைன் அம்சங்களாக, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், மற்றும் IR Blaster போன்ற வசதிகளும் இதுல இருக்கு.
இந்த போன் சைனால டிசம்பர்ல அறிமுகமாகலாம், இந்தியால 2026 முதல் காலாண்டில் வர வாய்ப்பிருக்கு. மொத்தத்துல, பெரிய பேட்டரி, பவர்ஃபுல் கேமரா, லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டுன்னு Realme 16 Pro ஒரு முழுமையான பேக்கேஜா மார்க்கெட்டை கலக்க வரும்னு எதிர்பார்க்கலாம்!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
WhatsApp Reels Shortcut for Chats Rolling Out to Android Beta Testers
Spotify Says Family Plan Verification Will Continue as It Tightens Account-Sharing Rules