ரியில்மயின் 10W வயர்லெஸ் சார்ஜர் விற்பனை தொடக்கம்... விலை ரூ.899 மட்டுமே!

ரியில்மயின் 10W வயர்லெஸ் சார்ஜர் விற்பனை தொடக்கம்... விலை ரூ.899 மட்டுமே!

இதே போல் 65W, 50W சூப்பர் டார்ட் சார்ஜர் மாடல்களும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது

ஹைலைட்ஸ்
  • Realme 10W Wireless Charger can charge Realme Buds Air
  • The charger can also charge newer iPhone models at 7.5W
  • Realme India CEO has announced the launch of its new chargers
விளம்பரம்

ரியல்மி நிறுவனம் 899 ரூபாய்க்கு 10W வயர்லெஸ் சார்ஜரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மேலும், 65W, 50W சார்ஜர் வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

சாம்சங், ரெட்மிக்குப் போட்டியாக ரியல்மி நிறுவனமும் ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும், மற்ற கேட்ஜெட்ஸ் தயாரிப்பிலும் முன்னணி வகித்து வருகிறது. அந்த வகையில், தற்போது வயர்லெஸ் சார்ஜர் ஒன்றை அறிமுகம் செய்து, விற்பனையைத் தொடங்கியுள்ளது. 

இது 10W சார்ஜர் ஆகும். கிரே கலரில் மட்டும் உள்ளது. இதன் சிறப்பம்சமே 9mm அளவுள்ள வேறு ஏதாவது உலோகப் பொருட்கள் இந்த சார்ஜர் அருகில் இருந்தால் டிடெக்ட் செய்து விடுகிறது. மேற்புறம் மெல்லிதான ஸ்கிரப் பெயின்டிங்கால் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த 10W சார்ஜர் உலகளவில் Qi தர சான்றிதழ் பெற்றுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன்களையும், ரியல்மி பட்ஸ் ஏர் போன்ற வயர்லெஸ் சார்ஜிங்கை ஏற்றுக்கொள்ளும் இதர கேட்ஜெட்ஸ்களையும் சார்ஜ் செய்ய முடியும்.

இதில் USB டைப் சி போர்ட் உள்ளது. 10W என்று குறிப்பிட்டாலும் 18W வரையிலான ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்ஸ்கள் பயன்படுத்த முடியும்.

ரியல்மியின் இந்த 10W சார்ஜர் 899 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் 65W, 50W சூப்பர் டார்ட் சார்ஜர் மாடல்களும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரியல்மியின் சிஇஓ மாதவ் செத் டுவிட் செய்துள்ளார்.

ரியல்மியின் இந்த சார்ஜரில், அதிவேக சார்ஜ் வசதிக்காக சூப்பர்டார்ட் டெக்னாலஜியைப் பயன்படுத்தியுள்ளது.  ரியல்மி X50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 65W சூப்பர் டார்ட் சார்ஜிங் ஆதரவைப் பெற்றிருக்கிறது.
கடந்த மாதம் ரியல்மி நிறுவனம், 125W அல்ட்ரா டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் 4,000mAh சக்தி கொண்ட பேட்டரியை 20 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »