ரியல்மியின் 10000 எம்ஏஎச் பவர் பேங் 2 அறிமுகம்! 

ரியல்மி 10000 எம்ஏஎச் பவர் பேங்க் 2 முந்தைய பவர் பேங்க் போன்ற அதே வடிவமைப்பைப் பின்பற்றுகிறது.

ரியல்மியின் 10000 எம்ஏஎச் பவர் பேங் 2 அறிமுகம்! 

ரியல்மி 10000 எம்ஏஎச் பவர் பேங்க் 2 இரண்டு வண்ணங்களில் வருகிறது

ஹைலைட்ஸ்
  • இந்த பவர் பேங்கில் 18 வாட் இரு வழி விரைவான சார்ஜிங் ஆதரவு உள்ளது
  • பவர் பேங்க் 2 விற்பனை இப்போது பிளிப்கார்ட் & ரியல்மி.காமில் நடைபெறும்
  • பவர் பேங்க் விரைவில் ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கும்
விளம்பரம்

ரியல்மி 10000 எம்ஏஎச் பவர் பேங்க் 2 என்ற பெயரில் ரியல்மி தனது புதிய பவர் வங்கியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன், நிறுவனம், ரியல்மி ஸ்மார்ட் டிவி, ரியல்மி வாட்ச் மற்றும் ரியல்மி பட்ஸ் ஏர் நியோ ஆகிய மூன்று தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 
 

விலை:

ரியல்மி 10000 எம்ஏஎச் பவர் பேங்க் 2-வின் விலை ரூ.999 ஆகும். இது கருப்பு மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டு வண்ணண்களில் கிடைக்கும். இந்த பவர் பேங்கின் விற்பனை இன்று பிற்பகல் 3 மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காமில் தொடங்கியுள்ளது. இந்த பவர் பேங்க் விரைவில் ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


விவரங்கள்:

இந்த பவர் பேங்க் இரட்டை வெளியீட்டு போர்ட்டுகள், யூ.எஸ்.பி டைப்-ஏ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்களுடன் 18 வாட் டூ-வே விரைவு சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. பவர்பேங்கில் 10,000 எம்ஏஎச் உயர் அடர்த்தி அடர்த்தி கொண்ட லித்தியம்-பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 13 அடுக்கு சுற்று பாதுகாப்புடன் வருகிறது. இது அதிவேக சார்ஜிங்கின் போது கூட பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த பவர் பேங் யூ.எஸ்.பி-பி.டி மற்றும் குவால்காம் கியூசி 4.0 உடன் இணக்கமானது.

ரியல்மி 10000 எம்ஏஎச் பவர் பேங்க் 2, எல்.ஈ.டி இண்டிகேட்டர் லைட்டைக் கொண்டுள்ளது. இது பவர் பேங்கின் பேட்டரி அளவைக் காட்டுகிறது. பவர் பேங்கில் கருப்பு வேரியண்ட்டில் மஞ்சள் நிறத்திலும், மஞ்சள் வேரியண்ட்டில் கருப்பு நிறத்திலும் ரியல்மி பிராண்டிங் உள்ளது.
ரியல்மி 10000 எம்ஏஎச் பவர் பேங்க் 2 விற்பனை மே 25 மதியம் 3 மணி முதல் தொடங்க உள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »