போகோ இந்தியா பொது மேலாளர் சி மன்மோகன், வரவிருக்கும் போகோ போன்கள், போகோ லாஞ்சருடன் MIUI-ஐ இயக்கும் என்றார்.
Poco-வின் வரவிருக்கும் போன் Poco X2 என்ற பெயரில் அறிமுகமாகும்
ஒரு சுயாதீன பிராண்டாக செயல்பட போகோ எடுத்த முடிவு இந்திய ஸ்மார்ட்போன் துறையில் எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. போகோ பிராண்டின் சந்தைப்படுத்தல் யுத்தி, குறிப்பாக அதன் தயாரிப்பு வரிசை குறித்து யூகங்கள் பரவலாக உள்ளன. போகோ இந்தியா பொது மேலாளர் சி மன்மோகன், ஜியோமியில் இருந்து ஒரு சுயாதீன நிறுவனமாக செயல்படுவதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் நிறுவனம் தனது முதல் போனை அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும், Poco X2 பிராண்டிலிருந்து முதல் போனாக இது இருக்காது. ஆனால், அது விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று போகோ நிர்வாகி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். வதந்திகள் உண்மையாக இருந்தால், அடுத்த மாதம் அறிமுகமாகும் போகோ போன் Poco X2 என அழைக்கப்படலாம்.
Poco இந்தியா பகிர்ந்த ட்வீட்டின் படி, போக்கோ இந்தியா பொது மேலாளர் பி.டி.ஐ-யிடம், பிராண்ட் சுதந்திர நடவடிக்கையைத் தொடர்ந்து முதல் போகோ போன் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார். போகோ நிர்வாகி வரவிருக்கும் போனை பெயரை வெளியிடவில்லை. ஆனால் Poco X2 அதன் அடுத்த வெளியீட்டின் பெயராக இருக்கும் என்று நிறுவனம் ஒரு தெளிவான குறிப்பை அளித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், Poco X2 எனக் கூறப்படும் அறிவிக்கப்படாத போன் கீக்பெஞ்சில் 8 ஜிபி ரேமை பேக் செய்து ஆண்ட்ராய்டு 10-ஐ இயக்குவதாகக் காணப்பட்டது. Poco X2 சமீபத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வமாக வெளியன Redmi K30's 4 ஜி வேரியண்ட்டின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம் என்று வதந்திகள் கூறுகின்றன.
ஒரு தனி நேர்காணலில், புதிதாக சுயாதீனமான போகோ பிராண்டிலிருந்து வெளிவரும் முதல் போனாக Poco F2 இருக்காது என்று மன்மோகன் தெரிவித்தார். அதற்கு பதிலாக, நிறுவனம் முற்றிலும் புதிய போனை அறிமுகப்படுத்தும். மேலும், கிண்டல் செய்யப்படும் சாதனம் Poco F2 என்ற யூகங்களை மேலும் தூண்டுகிறது. இருப்பினும், Poco F2 உண்மையானது என்றும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் போகோ இந்தியா நிர்வாகி தெளிவுபடுத்தினார். 2020-ஆம் ஆண்டில் நிறுவனம் போகோ பிராண்டின் கீழ், பல போன்களை அறிமுகப்படுத்தும் என்று மன்மோகன் சமீபத்தில் கேஜெட்ஸ் 360-க்கு அளித்த பேட்டியில் கூறினார். வரவிருக்கும் போன்கள், தொடர்ந்து போகோ லாஞ்சருடன் MIUI-ஐ இயக்கும் என்றும் அவர் கூறினார். ஆனால், புதிய சாத்தியக்கூறுகள் குறித்து அவர் அமைதியாக இருந்தார். இதன் தனிப்பயன் தோல் வரவிருக்கும் போகோ போன்களுக்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Neutrino Detectors May Unlock the Search for Light Dark Matter, Physicists Say
Uranus and Neptune May Be Rocky Worlds Not Ice Giants, New Research Shows
Steal OTT Release Date: When and Where to Watch Sophie Turner Starrer Movie Online?
Murder Report (2025): A Dark Korean Crime Thriller Now Streaming on Prime Video