Poco X2 இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
                இந்தியாவில் Poco X2-வின் விலை ரூ.15,999-யில் இருந்து தொடங்குகிறது
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மென்பொருள் அப்டேட்டுகள் ஒரு பெரிய விஷயம். ஒன்பிளஸ் மற்றும் சாம்சங் போன்ற சில பிராண்டுகள் ஆண்ட்ராய்டின் சமீபத்திய பதிப்பை அதன் முதன்மை சாதனங்களுக்குத் வெளியிடும் போது, மற்ற பிராண்டுகள் வெறுமனே அவ்வாறு செய்யாது. ஷாவ்மியின் துணை பிராண்ட் போகோ இப்போது தனது இரண்டாவது ஸ்மார்ட்போனான Poco X2, ஆண்ட்ராய்டு 11-க்கு கிடைக்கும்போது அதை புதுப்பிக்கப்போவதாக உறுதிப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு 11 தற்போது வெளியிடப்படவில்லை, ஆனால் மென்பொருளின் டெவலப்பர் மாதிரிக்காட்சி வெளியிடப்பட்டது, இது ஆண்ட்ராய்டு 11-ன் பார்வையை நமக்கு வழங்குகிறது.
அண்மையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட Poco X2, Android 11-ஐப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், ஸ்மார்ட்போன் Android 10-க்கு மேல் போகோவிற்காக MIUI-யில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆண்ட்ராய்டு 11-க்கும் புதுப்பிக்கப்படும் போது Poco-வின் MIUI-ஐ எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 11 மென்பொருள் அப்டேட்டை உறுதிப்படுத்துவதைத் தவிர, போகோ, வேறு எந்த விவரங்களையும் அல்லது காலவரிசையை இந்த நேரத்தில் வெளியிடவில்லை.
இந்த மாத தொடக்கத்தில் Poco X2 இந்தியாவில் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் ஆன்லைன் பிரத்தியேக சாதனமாக அறிமுகப்படுத்தியது. Poco X2-வின் அடிப்படை மாடலுக்கு 15,999 ரூபாயும், டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.19,999-யாக உள்ளது. இது ஃபிளாஷ் விற்பனை வழியாக மட்டுமே விற்கப்படுகிறது, இது பிப்ரவரி 25, நாளை விற்பனைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
Poco X2 குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் மூன்று ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்டுகளில் வருகிறது. அடிப்படை வேரியண்ட் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜையும், மிட் வேரியண்ட்டில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜையும் வழங்குகிறது, மேலும் டாப் வேரியண்ட்டில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. X2, 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் ஒரு பெரிய 6.67 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
இது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா என்ற சிறப்பம்சத்துடன் பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில், இது 20 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் depth சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. Poco X2, 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் தொகுக்கப்பட்ட 27W சார்ஜரைப் பெறுகிறது.
Is Poco X2 the new best phone under Rs. 20,000? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 OpenAI Upgrades Sora App With Character Cameos, Video Stitching and Leaderboard
                            
                            
                                OpenAI Upgrades Sora App With Character Cameos, Video Stitching and Leaderboard
                            
                        
                     Samsung's AI-Powered Priority Notifications Spotted in New One UI 8.5 Leak
                            
                            
                                Samsung's AI-Powered Priority Notifications Spotted in New One UI 8.5 Leak
                            
                        
                     Samsung Galaxy S26 Series Could Feature Model Slimmer Than Galaxy S25 Edge With New Name
                            
                            
                                Samsung Galaxy S26 Series Could Feature Model Slimmer Than Galaxy S25 Edge With New Name
                            
                        
                     iQOO 15 Colour Options Confirmed Ahead of November 26 India Launch: Here’s What We Know So Far
                            
                            
                                iQOO 15 Colour Options Confirmed Ahead of November 26 India Launch: Here’s What We Know So Far