Poco X2, 120Hz டிஸ்ப்ளே மற்றும் USB Type-C port மற்றும் 3.5mm audio jack ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று போகோ ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது.
Photo Credit: Flipkart
Poco X2 பிப்ரவரி 4-ஆம் தேதி இந்தியாவில் அறிமுமாகவுள்ளது
Poco X2 இந்தியாவில் பிப்ரவரி 4-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இப்போது, ஸ்மார்ட்போன் அறிமுகம் வரையில், போனின் அம்சங்களையும் விவரக்குறிப்புகளையும் போகோ கிண்டல் செய்து வருகிறது. Poco X2 27W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் என்று சமீபத்திய டீஸர் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே கொடுக்கப்பட்டதாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று, Poco X2, Redmi K30 4G வேரியண்டின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று வதந்தி பரவியுள்ளது. சமீபத்திய போக்கோ வெளிப்பாடு அந்த வதந்தியை மேலும் உறுதிப்படுத்துகிறது.
ஒரு ட்வீட்டில், Poco X2, பூஜ்ஜியத்திலிருந்து 40 சதவிகித சார்ஜ் வரை அடைய 25 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் என்று போகோ இந்தியா கூறியது. இந்த போனை, முழு சார் செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை நிறுவனம் சுவாரஸ்யமாகக் காட்டவில்லை. ஸ்மார்ட்போனில் 27W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவைப் பற்றிய பிட்டைச் சேர்க்க, பிளிப்கார்ட் Poco X2 மைக்ரோசைட்டை புதுப்பித்துள்ளது. மென்மையான அனுபவத்திற்காக, இந்த போன் 120Hz டிஸ்ப்ளே மற்றும் USB Type-C port, 3.5mm audio jack மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று போகோ ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது. வேறு எந்த புதிய விவரங்களும் இப்போது கிண்டல் செய்யப்படவில்லை. ஆனால், பிப்ரவரி 4 வரை ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அம்சத்தை போகோ வெளியிட வாய்ப்புள்ளது.
முன்பை விட அதிகமாக தெரிகிறது, Poco X2 உண்மையில் Redmi K30 4G-யாக மாறினால், இந்த போன், டூயல் hole-punch செல்பி கேமராக்கள் மற்றும் 20:9 aspect ratio கொண்ட 6.7-inch full-HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த போன் ஸ்னாப்டிராகன் 730G SoC-ல் இயங்கும் மற்றும் 4,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
பின்புற கேமரா அமைப்பில் நான்கு ஷூட்டர்கள் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - 64-மெகாபிக்சல் + 2-மெகாபிக்சல் + 2-மெகாபிக்சல் + 8-மெகாபிக்சல் ஆகும். முன்புறத்தில், 20-மெகாபிக்சல் ஷூட்டர் மற்றும் 2-மெகாபிக்சல் பட சென்சார் இருக்கும். மேலும், NFC மற்றும் IR blaster ஆகியவை Poco X2-வில் காணப்படும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series