Photo Credit: Poco
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Poco M7 Pro 5G மற்றும் Poco C75 5G செல்போன்கள் பற்றி தான்.
Poco M7 Pro 5G மற்றும் Poco C75 5G ஆகியவை இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன் கேமரா மற்றும் டிஸ்ப்ளே திறன்கள் உட்பட பல தகவல்கள் வெளியாகி உள்ளது. Poco M7 Pro 5G ஆனது சோனி சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் Poco C75 5G ஆனது Xiaomi நிறுவனத்தின் HyperOS மூலம் இயங்கும் நிறுவனத்தின் C தொடரின் முதல் செல்போனாக மாறும்.
Poco India அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்களை அறிவித்தது. நிறுவனம் வெளியிட்ட தகவல்படி Poco M7 Pro 5G ஆனது 6.67-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,100 nits உச்ச பிரகாசம் கொண்டதாக இருக்கும். TUV டிரிபிள் சான்றிதழ் மற்றும் SGS ஐ கேர் டிஸ்ப்ளே சான்றிதழ் ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. இது 92.02 சதவீத திரை-உடல் விகிதத்தைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
50 மெகாபிக்சல் Sony LYT-600 கேமரா மூலம் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், மல்டி-ஃபிரேம் நாய்ஸ் கேன்சலேசன் ஆகியவற்றுடன் டூயல் ரியர் கேமரா அமைப்பு கொண்டிருக்கும். இது சூப்பர் ரெசல்யூஷன் தொழில்நுட்பத்துடன் இன்-சென்சார் ஜூம் உடன் வரும். மேலும் 300 சதவீதம் சூப்பர் வால்யூம், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் ஆதரவு, 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகிய வசதிகளும் இருக்கும்.
இதற்கிடையில், Poco C75 5G மாடல் ஹைப்பர் ஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் முதல் சி சீரியஸ் செல்போன் என்பதையும் நிறுவனம் எடுத்துக்காட்டுகிறது , அதே நேரத்தில் இதன் விலை ரூ. 9,000 என்கிற அளவில் இருக்கும். இதில் சோனி சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பிரிவு செல்போன்களில் இதில் மட்டுமே இந்த வசத்யகி இருப்பதாகக் கூறப்படுகிறது. வரவிருக்கும் கைபேசியானது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 4s ஜெனரல் 2 சிப்செட்டை 4nm கட்டமைப்புடன் பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது 8ஜிபி வரை ரேம் (4ஜிபி டர்போ ரேம் உட்பட) மற்றும் 1டிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரியுடன் இணைக்கப்படும்.
இரண்டு வருட OS மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று Poco கூறுகிறது. கைபேசியின் மற்ற அம்சங்களில், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், டேப் சைகைகள், டூயல் சிம் ஆதரவு மற்றும் MIUI டயலர் ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்