Poco M6 Plus 5G வாங்கியே தான் ஆகணும் வேற வழி இல்ல போல!

Poco M6 Plus 5G வாங்கியே தான் ஆகணும் வேற வழி இல்ல போல!

Photo Credit: Gadgets 360

ஹைலைட்ஸ்
  • Poco M6 Plus 5G ஆனது Android 14 அடிப்படையிலான HyperOS உடன் வந்துள்ளது
  • இந்தியாவில் புதிய Poco நிறுவனத்தின் சாதனங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்
  • சிறப்பு விற்பனையின் போது இதன் விலை இன்னும் கணிசமாக குறையும்
விளம்பரம்

ஆகஸ்ட் மாதம் துவங்கிவிட்டது. Amazon மற்றும் Flipkart பயனர்கள் அனைவரும் இந்த மாதத்திற்காக தான் காத்திருந்தனர். காரணம், Independence Day 2024 கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்த மாதம் தான் இரண்டும் இ-காமர்ஸ் நிறுவனங்களும் சிறப்பு விற்பனைகளை அறிவித்துள்ளது. Amazon Great Freedom Festival Sale 2024 மற்றும் Flipkart Big Freedom Sale 2024 ஆகஸ்ட் 5ம் தேதி துவங்கிவிட்டது. 

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். 

நாம் பார்க்கப்போகும் Poco M6 Plus 5G ஆனது Qualcomm Snapdragon 4 Gen 2 AE சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 5,030mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP53 மதிப்பீட்டை கொண்டுள்ளது. Poco M6 Plus 5G தற்போது Flipkart வழியாக ரூ 13,499 விலையில் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வசதி உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இதே செல்போன் ரூ 14,499 என்ற விலையில் கிடைக்கிறது. இது கிராஃபைட் பிளாக், ஐஸ் சில்வர் மற்றும் மிஸ்டி லாவெண்டர் நிறங்களில் கிடைக்கிறது. Flipkart Axis கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கினால் கூடுதலாக ஐந்து சதவீத தள்ளுபடியும் வரும். 

120Hz அடாப்டிவ் புதுப்பிப்பு வீதம் கொண்ட Corning Gorilla Glass 3 டிஸ்பிளே இருக்கிறது. 6.79-இன்ச் முழு-HD+ வசதியுடன் வருகிறது.  Poco M6 Plus 5G செல்போனில்  3x இன் சென்சார் ஜூம் வசதியும் இருக்கிறது. 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கொண்ட 108 மெகாபிக்சல் பிரதான சென்சார் கேமரா அமைப்பும் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது.  33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன்  5,030mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இதே போல Poco Buds X1 வசதிகளும் சக்கத்தாக இருக்கிறது. இன் இயர் டிசைனுடன் 12.4mm டைனமிக் டைட்டானியம் டிரைவர்களைக் கொண்டுள்ளது. டச் மூலம் கட்டுப்படுத்தலாம். 40dB ஹைப்ரிட் ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் வசதி உள்ளது. சார்ஜிங் கேஸில் 480mAh பேட்டரி உள்ளது, அவை ஒருமுறை சார்ஜ் செய்தால் 36 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்கும் என கூறப்படுகிறது. இயர்பட்களில் SBC மற்றும் AAC ஆடியோ கோடெக்குகளுக்கான வசதி, புளூடூத் 5.3 இணைப்பு உள்ளது. தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்காக IP54 மதிப்பீட்டை பெற்றுள்ளது. 

மேலும் வைஃபை, என்எப்சி, புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி சப்போர்ட் செய்கிறது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியும் கொண்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. இந்த செல்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Poco நிறுவனம். 
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Huawei Enjoy 80 பெரிய பேட்டரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
  2. இந்தியாவில் அறிமுகமானது அட்டகாசமான Insta360 X5 புதிய 360 டிகிரி கேமரா
  3. Chromebook மாடல்களான CX14 மற்றும் CX15 அறிமுக செய்த ASUS நிறுவனம்
  4. ஆப்பிள் வாட்ச்களுக்கு இணையான அம்சம் இருக்கும் Redmi Watch Move
  5. HMD Global நிறுவனம் Mattel உடன் இணைந்து அறிமுகப்படுத்தும் Barbie Phone
  6. CMF Phone 2 Pro செல்போன் ஏப்ரல் 28ல் உலகமெங்கும் அறிமுகமாகிறது
  7. மார்க்கெட்டில் விலை குறைந்த 5G மாடல் போனாக அறிமுகமாகிறது Itel A95 5G
  8. 5G ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் புரட்சி செய்யப்போகும் OPPO K12s 5G செல்போன்
  9. OPPO நிறுவனம் தனது புதிய மிட் ரேஞ்ச் 5G ஸ்மார்ட்போன் OPPO A5 Pro 5G
  10. மோட்டோரோலாவின் முதல் லேப்டாப் Moto Book 60 இந்தியாவில் அறிமுகம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »