சையோமி நிறுவனத்தில் போகோ F1, இன்று 12 மணி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இரண்டு வாரத்துக்கு முன்னர் போகோ F1, அறிமுகப்படுத்திய பின்னரான இரண்டாவது ஃப்ளாஷ் விற்பனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போனின் சிறப்பம்சமாக பார்க்கப்படுவது ஸ்னாப்டிராகன் எஸ்.ஓ.சி 805 தான். போகோ F1 ஆர்மர்டு எடிஷனும் இன்று விற்பனையாக உள்ளது. இந்த விற்பனைக்குப் பிறகு சையோமி, தனது ரெட்மி 6 ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வரப் போகிறது.
போகோ F1 விலை மற்றும் பிற தகவல்கள்:
6 ஜிபி ரேம், 64 ஜிபி உள் சேமிப்பு வசதி கொண்ட போகோ F1 போனின் விலை 20,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள் சேமிப்பு வசதி கொண்ட போகோ F1 விலை 23,999 ரூபாய்க்கு விற்கப்படும். இவை இரண்டும் அல்லாமல், 8 ஜிபி ரேம் மற்றும் 256 உள் சேமிப்பு வசதி கொண்ட போன் 28,999 ரூபாய்க்கு வாங்க முடியும். இந்த போன், சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கப் பெறுகிறது. இந்த போன்களுக்கு எல்லாம் மேல் போகோ F1 ஆர்மர்டு வெர்ஷன் போன் இருக்கும். அதில் 8 ஜிபி ரேம், 256 ஜிபி உள் சேமிப்பு வசதி இருக்கும். அதன் விலை, 29,999 ரூபாயாகும்.
எம்ஐ.காம் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் இந்த போனை 12 மணியிலிருந்து வாங்க முடியும். விற்பனைக்கு வரும் சில நிமிடங்களில் போகோ F1 போன்கள் காலியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் மட்டும், 5 நிமிடத்தில் 1 லட்சம் போகோ F1 போன்கள் விற்கப்பட்டுள்ளதாக சையோமி நிறுவனம் கூறியுள்ளது. 1 வினாடிக்கு 300 போன்கள் வீதம் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போனில் 6.1 இன்ச் ஃபுல் டிஸ்ப்ளே, 18.7:9 ஆஸ்பக்ட் ரேஷியோ, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஆகிய வசதிகள் ஈர்க்கின்றன. போனின் பின் புறம் 12 + 5 மெகா பிக்சல் டூயல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் 20 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் பலரைக் கவரும். விரல் மூலம் உணரப்படும் மற்றும் முகத்தை உணரும் சென்சார்கள், போனின் சிறப்பைக் கூட்டுகின்றன. 4,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, குயிக் சார்ஜ் 3.0, 4ஜி+ போன்ற கட்டமைப்பு வசதிகள் போனுக்கு பலம் சேர்க்கின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்