போகோ F1 ஃப்ளாஷ் விற்பனை இன்று..!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
போகோ F1 ஃப்ளாஷ் விற்பனை இன்று..!
ஹைலைட்ஸ்
  • இது போகோ F1-ன் இரண்டாவது ஃப்ளாஷ் விற்பனையாகும்
  • 3 வித வேரியன்ட்களில் இந்த போன் வருகிறது
  • 20,999 ரூபாய் முதல் இந்த போனை வாங்கலாம்

சையோமி நிறுவனத்தில் போகோ F1, இன்று 12 மணி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இரண்டு வாரத்துக்கு முன்னர் போகோ F1, அறிமுகப்படுத்திய பின்னரான இரண்டாவது ஃப்ளாஷ் விற்பனை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த போனின் சிறப்பம்சமாக பார்க்கப்படுவது ஸ்னாப்டிராகன் எஸ்.ஓ.சி 805 தான். போகோ F1 ஆர்மர்டு எடிஷனும் இன்று விற்பனையாக உள்ளது. இந்த விற்பனைக்குப் பிறகு சையோமி, தனது ரெட்மி 6 ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வரப் போகிறது.
 

 

போகோ F1 விலை மற்றும் பிற தகவல்கள்:

6 ஜிபி ரேம், 64 ஜிபி உள் சேமிப்பு வசதி கொண்ட போகோ F1 போனின் விலை 20,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள் சேமிப்பு வசதி கொண்ட போகோ F1 விலை 23,999 ரூபாய்க்கு விற்கப்படும். இவை இரண்டும் அல்லாமல், 8 ஜிபி ரேம் மற்றும் 256 உள் சேமிப்பு வசதி கொண்ட போன் 28,999 ரூபாய்க்கு வாங்க முடியும். இந்த போன், சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கப் பெறுகிறது. இந்த போன்களுக்கு எல்லாம் மேல் போகோ F1 ஆர்மர்டு வெர்ஷன் போன் இருக்கும். அதில் 8 ஜிபி ரேம், 256 ஜிபி உள் சேமிப்பு வசதி இருக்கும். அதன் விலை, 29,999 ரூபாயாகும். 

எம்ஐ.காம் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் இந்த போனை 12 மணியிலிருந்து வாங்க முடியும். விற்பனைக்கு வரும் சில நிமிடங்களில் போகோ F1 போன்கள் காலியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் மட்டும், 5 நிமிடத்தில் 1 லட்சம் போகோ F1 போன்கள் விற்கப்பட்டுள்ளதாக சையோமி நிறுவனம் கூறியுள்ளது. 1 வினாடிக்கு 300 போன்கள் வீதம் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த போனில் 6.1 இன்ச் ஃபுல் டிஸ்ப்ளே, 18.7:9 ஆஸ்பக்ட் ரேஷியோ, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஆகிய வசதிகள் ஈர்க்கின்றன. போனின் பின் புறம் 12 + 5 மெகா பிக்சல் டூயல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் 20 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் பலரைக் கவரும். விரல் மூலம் உணரப்படும் மற்றும் முகத்தை உணரும் சென்சார்கள், போனின் சிறப்பைக் கூட்டுகின்றன. 4,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, குயிக் சார்ஜ் 3.0, 4ஜி+ போன்ற கட்டமைப்பு வசதிகள் போனுக்கு பலம் சேர்க்கின்றன. 

  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value for money
  • Sturdy body
  • Good battery life
  • Bad
  • Average low-light camera performance
  • No video stabilisation at 4K
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1080x2246 pixels
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
  1. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது ஒப்போ ரெனோ 4 சீரிஸ்! விலை, சிறப்பம்சங்கள்!!
  2. சில்வர் லேக் நிறுவனம் ஜியோவில் கூடுதலாக ரூ.4,547 கோடி முதலீடு!
  3. மீண்டும் ப்ளே ஸ்டோருக்கு வந்தது மிட்ரான் ஆப்! பயனர்கள் உற்சாகம்
  4. ஹானரின் அட்டகாசமான பட்ஜெட் போன்! புத்தம்புதிய சிறப்பம்சங்களுடன் வெளியீடு
  5. 2 பில்லியன் டாலர் பங்குகளை வாங்குகிறதா அமேசான் நிறுவனம்? ஏர்டெல் விளக்கம்!
  6. விரைவில் இந்தியாவில் வெளியாகிறது எம்ஐ நோட்புக்; தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
  7. ஏர்டெலுக்கு டஃப் கொடுக்கும் ஜியோ! ஹாட்ஸ்டார் விஐபி ஓராண்டு சந்தா இலவசம்
  8. இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A31 விலை, சிறப்பம்சங்கள்!
  9. மேற்கு வங்கத்தில் மதுபானம் ஹோம் டெலிவரி! ஸ்விக்கி, ஜொமேட்டோ அசத்தல்-மது பிரியர்கள் உற்சாகம்
  10. 4K திரை கொண்ட நோக்கியா 43-இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் வெளியானது! விலை விவரம்!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com