ஓப்போ ரெனோ 3ஏ – ஹைடெக்காக களத்திற்கு வந்திருக்கும் சூப்பர் மொபைல்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 24 ஜூன் 2020 13:56 IST
ஹைலைட்ஸ்
  • Oppo Reno 3A launched in Japan
  • The phone comes with 6GB RAM and 128GB storage
  • Oppo Reno 3A is priced at JPY 39,800 (roughly Rs. 28,100)

குவால்கம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்.ஓ.சி. மொபைலின் வேகமான இயக்கத்திற்கு உதவும்.

ஓப்போ நிறுவனம் ரெனோ 3ஏ என்ற பெயரில் புதிதாக ஹைடெக் மொபைல் ஒன்றை சந்தைக்கு கொண்டு வரவுள்ளது. தொடர்ந்த ஹைஃபை மொபைல்களை வெளியிட்டு வரும் ஓப்போ நிறுவனத்தின் ரெனோ 3ஏ எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

6 ஜி.பி. ரேம் திறன் கொண்டதாக இந்த ரெனோ 3ஏ வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்பீல்டு மெமரி 128 ஜி.பி. ஆகும்.

ஜப்பானில் இந்த மொபைல் ஏற்கனவே விற்பனைக்கு வந்து விட்டது. அங்கு 39,800 ஜப்பான் யென்னிற்கு மொபைல் விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 28,100.

கருப்பு மற்றும் வெள்ளை என 2 வண்ணங்களில்  மொபைல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜூன் 25-ம்தேதி இந்த மொபைல் இந்திய சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்ட ரெனோ 3ஏ, டூயல் நானோ சிம்களுக்கு சப்போர்ட் செய்யும். 6.44 இன்ச் முழுவதும் எச்.டி. அமோலெட் டிஸ்ப்ளேயுடன், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் மொபைலின் டிஸ்ப்ளே பிரிவு படு ஸ்ட்ராங்காக உள்ளது.

குவால்கம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்.ஓ.சி. மொபைலின் வேகமான இயக்கத்திற்கு உதவும்.

குவாட் கேமரா அமைப்பு ரெனோ 3 ஏவில் உள்ளது. 48 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 8மெகா பிக்சல் செகண்டரி, 2 இரு மெகா பிக்சல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement

செல்ஃபிக்காக 16 மெகா பிக்சல் கேமரா இதில் உள்ளது.

இன்டர்னல் மெமரியை மைக்ரோ எஸ்.டி. மூலமாக 256 ஜி.பி. வரையில் அதிகரித்துக் கொள்ளலாம். கனெக்டிவிட்டியை பொருத்தளவில் வைஃபை 802 டூயல் பேண்ட், ப்ளூடூத் வி.5.0, என்.எப்.சி., ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. போர்ட், டைப் சி போர்ட் சார்ஜிங் உள்ளிட்டவை இதன் மற்ற அம்சங்கள்.

பேட்டரியை பொருத்தளவில் 4,025 ஆம்ப் திறன் கொண்டது. ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.

Advertisement

160.9x74.1x8.2 எம்.எம். வடிவமைப்பு கொண்ட இந்த ஓப்போ ரெனோ 3 ஏவின் மொத்த எடை 175 கிராம்கள்.


Is Mi Notebook 14 series the best affordable laptop range for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Advertisement

 
KEY SPECS
Display 6.44-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4025mAh
OS Android
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo, Oppo Reno 3A, Oppo Reno 3A price, Oppo Reno 3A specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. கூகுள் ஜெமினி 3.6 ஃபிளாஷ் & 3.5 ஃபிளாஷ்-லைட் அறிமுகம்; ஜெமினி 4 பயிற்சி நடப்பதாக தகவல்!
  2. சாம்சங் அன்ப்பேக்டு இன்று: கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8, ஃபிளிப் 8 நேரலையை பார்ப்பது எப்படி?
  3. போட் ஏர்டோப்ஸ் புரோகிளிப் மதிப்புரை: அன்றாட பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது
  4. NFC ஆதரவுடன் ஆஃப்லைன் யுபிஐ கட்டண வசதி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்
  5. விவோ S2 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்: விளம்பர போஸ்டர் கசிந்தது
  6. டெல் ஏலியன்வேர் 16X அரோரா, 16 & 18 ஏரியா-51 இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
  7. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 தொடர் விவரங்கள் கசிந்தன; புரோ மேக்ஸ் மாடலில் டைமன்சிட்டி 9600 புரோ சிப்செட் இடம்பெறலாம்!
  8. டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5G டைமன்சிட்டி 7400 அல்டிமேட் SoC உடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  9. 150W சவுண்ட் மற்றும் 4 EQ மோட்களுடன் போர்ட்ரானிக்ஸ் பியூர் சவுண்ட் புரோ X2 ஹோம் தியேட்டர் இந்தியாவில் அறிமுகம்
  10. ஷியோமி பவர் பேங்க் 5i 20000mAh இந்திய அறிமுக தேதி உறுதி; முக்கிய அம்சங்கள், விவரங்கள் வெளியீடு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.