ஒப்போ இந்தியா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் Reno 15 சீரிஸ் வருகையை உறுதிப்படுத்தியுள்ளது
Oppo X-இல் Reno 15 Series 5G மாடல்களில் ஒன்றின் நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்களை டீஸர் செய்துள்ளது.
ஒப்போ (OPPO) ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருந்த அந்த அறிவிப்பு ஒருவழியா வந்தாச்சு. ஒப்போ இந்தியா தனது எக்ஸ் (X) தளத்துல "எங்களுக்குப் பிடித்த சீரிஸின் புதிய சீசன்" அப்படின்னு சொல்லி Reno 15 Series 5G வருகையை அதிகாரப்பூர்வமா உறுதிப்படுத்தியிருக்காங்க. இந்த முறை வெறும் ரெண்டு போன் மட்டும் இல்லைங்க, மொத்தம் நாலு மாடல்கள் இந்தியாவுல லான்ச் ஆகப்போகுதுன்னு தகவல்கள் வெளியாகி அதிர வச்சிருக்கு.
இந்த சீரிஸ்ல Reno 15, Reno 15 Pro, அப்புறம் பட்ஜெட் வாசிகளுக்காக Reno 15C-னு மூணு மாடல்கள் இருக்கு. ஆனா, இதுல ஹைலைட்டே இந்த Reno 15 Pro Mini தான். இதுவரைக்கும் ஆப்பிள்ல தான் மினி மாடல்கள் பார்த்திருப்போம், இப்போ ஒப்போவும் ஒரு குட்டி சைஸ் பவர்ஃபுல் போனை கொண்டு வர்றாங்க. இதுல 6.32-இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்குமாம், கையில வச்சுக்க ரொம்ப வசதியா இருக்கும்.
சிறப்பம்சங்கள்னு பார்த்தா, இந்த சீரிஸ்ல கேமராவுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. மெயின் கேமரா 200MP வரைக்கும் இருக்கும்னு சொல்லப்படுது. அதுவும் 3.5x ஆப்டிகல் ஜூம் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் வசதியோட வரப்போகுது. இதனால தூரத்துல இருக்குற பொருளை கூட துல்லியமா போட்டோ எடுக்கலாம். வீடியோவுல 4K 60fps வசதியும் இருக்கும்.
பெர்பார்மன்ஸை பொறுத்தவரை, MediaTek Dimensity 8450 சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. பேட்டரி விஷயத்துல ஒப்போ இந்த தடவை ஒரு பெரிய ஆச்சரியத்தை வச்சிருக்காங்க. என்ட்ரி லெவல் மாடலான Reno 15C-ல 7000mAh பேட்டரி வர வாய்ப்பு இருக்கு. மத்த மாடல்கள்ல 6200mAh பேட்டரியோட 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருக்கும்.
டிசைனை பொறுத்தவரை வழக்கமான ஒப்போ ஸ்டைல்ல 'கிளோயிங் டெக்ஸ்சர்' (Glowing Texture) மற்றும் மெட்டல் பிரேம்ல ரொம்ப பிரீமியமா இருக்கும். இந்தியாவுல இந்த போன்கள் ஜனவரி 2026-ன் முதல் வாரத்துல லான்ச் ஆக அதிக வாய்ப்பு இருக்கு.
இதோட ஆரம்ப விலை சுமார் ₹30,000-லிருந்து ஆரம்பிக்கலாம்னு கணிக்கப்படுது. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்ல இதோட மைக்ரோ-சைட் இப்போவே லைவ் ஆகிடுச்சு. ஒரு நல்ல கேமரா, நீண்ட நேர பேட்டரி பேக்கப், அப்புறம் ஸ்டைலிஷான லுக் வேணும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா இந்த Reno 15 சீரிஸை மிஸ் பண்ணாதீங்க!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Asus VM670KA AiO All-in-One Desktop PC With 27-Inch Display, Ryzen AI 7 350 Chip Launched in India