இந்தியாவில் இந்த ஓப்போ ரெனோ 10x ஜூம் ஸ்மார்ட்போன்கள் மொத்தமாக விற்றுத் தீர்ந்ததால், ஓப்போ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களில் தயாரிப்பை முடுக்கிவிட்டுள்ளது. வளர்ந்துவரும் சந்தை தேவைக்களை சமாளிக்கும் எண்ணிக்கையில் இந்த ஓப்போ ரெனோ 10x ஜூம் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்படும் என கடந்த புதங்கிழமை ஓப்போ நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய தயாரிப்பில் வெளியாகும் ஓப்போ ரெனோ 10x ஜூம் ஸ்மார்ட்போன்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது ஓப்போ நிறுவனம்.
முன்னதாக ஓப்போ நிறுவனம், முதன் முதலாக இந்த 'ஓப்போ ரெனோ 10x ஜூம்' ஸ்மார்ட்போனை கடந்த மே 28-ஆம் தேதியன்று, புது டெல்லியில் ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தியது. மேலும், இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூன் 7-ல் இந்தியாவில் முதன்முதலில் விற்பனைக்கு வந்தது. இன்னிலையில், இந்த ஸ்மார்ட்போன்கள் மொத்தமாக விற்றுத் தீர்ந்துபோனது.
விரைவில் ஆன்லைன் மற்றும் சந்தைக்கடைகளில் கிடைக்கப்பெரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது ஓப்போ நிறுவனம். அதன்படி இந்த 'ஓப்போ ரெனோ 10x ஜூம்' ஸ்மார்ட்போனை ஆப்லைன் சந்தை கடைகளில் பெருபவர்களுக்கு 2,500 ரூபாய் தள்ளுபடி வழங்கவுள்ளது. இந்த சலுகை ஜூலை 8 முதல் ஜூலை 20 வரை மட்டுமே இருக்கும் எனவும் ஓப்போ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
,
இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு வகைகளில் அறிமுகமாகி விற்பனையானது. 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு அளவு என இரு வகைகளை கொண்டுள்ளது இந்த 'ஓப்போ ரெனோ 10x ஜூம்' ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் 39,990 ரூபாய் என்ற விலையிலும், 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் 49,990 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையானது.
6.6-இன்ச் FHD+ திரை கொண்ட ஓப்போ ரெனோ 10x ஜூம் ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது.
3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். முதன்மையாக 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் அளவிலான டெலிபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா என முன்று விதமான கேமராக்கள். மேலும், இதன் முன்புறத்தில் சைட்-ஸ்விங் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
பேட்டரி அளவை பற்றி பேசுகையில் 4,065mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்