Oppo R17 திறன்பேசியின் விலை & இதர விவரங்களை, மேலும் இதனது மேம்பட்ட மாடலான Oppo 17 Pro -வும் சீனாவில் ஓப்போ நிறுவனம் வெளியிட்டுள்ளது
Oppo R17 Pro கிரேடியண்ட் வண்ணக் கண்ணாடியாலான பின்புறத்தைக் கொண்டுள்ளது
Oppo R17 திறன்பேசியின் விலை & இதர விவரங்களை ஓப்போ நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இதனது மேம்பட்ட மாடலான Oppo 17 Pro -வும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறி கேமராக்கள், டிஸ்பிளேவுடன் கூடிய கைரேகை உணரி (fingerprint sensor) ஆகியவற்றை R17 மாடல் கொண்டுள்ளது. பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளது இதன் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. ஹூவே P20 Pro போனில் உள்ளதை ஒத்ததாக இது அமைந்திருக்கிறது. சூப்பர் VOOC ஃப்ளாஷ் சார்ஜிங் வசதி, எட்டு ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 710 பிராசசர், திரையின் மேல்நடுப்பகுதியில் சிறிய வெட்டு வடிவம் (display notch) ஆகியவை இதன் பிற சிறப்பம்சங்களாகும்.
ஓப்போ R17 விலை:
சீன சமூகவலைதளமான வெய்போவில் வெளியான அதிகாரபூர்வ தகவலின்படி, ஓப்போ R17-இன் விலை இந்திய மதிப்பில் 35,600 ரூபாய். இது 8ஜிபி ரேம்/128ஜிபி மெமரி உடைய போனின் விலை. இதிலேயே 6ஜிபி ரேம்/128 ஜிபி மெமரியுடன் வெளியாகும் போனின் விலை இந்திய மதிப்பில் 32,600 ரூபாயாக இருக்கும். ஒப்போவின் அதிகார்வபூர்வ இணையதளத்தில் இப்போனை முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆகஸ்ட் 30 முதல் இதன் விற்பனை தொடங்கும். முன்பே அறிவிக்கப்பட்ட Neon Purple, Streamer Blue நிறங்கள் போக 'Fog gradient' என்று புதிதாக மற்றொரு நிறத்திலும் இப்போன் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 36,600 ரூபாய் ஆகும்.
ஓப்போ R17 Pro விலை:
சீனாவில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி இதன் விலை இந்திய மதிப்பில் 43,800 ரூபாயாக இருக்கலாம். அக்டோபர் மத்தியில் இதன் விற்பனை தொடங்கும். 'Fog gradient என்னும் புதிய நிறத்தில் இப்போன் வெளியாக உள்ளது. இத்திறன்பேசி இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை
Oppo R17 Pro திறன் குறிப்பீட்டு விவரங்கள்:
டூயல் சிம் (நானோ), ஆண்டிராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட கலர் இயங்குதளம், 6.4” (1080*2340 பிக்சல்கள்) முழு எச்டி டிஸ்பிளே, 91.5% அகல உயரத் தகவு, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 SoC, 8ஜிபி ரேம், பின்புறம் மூன்று கேமராக்கள் (12mp f/1.5-2.4, 20 mp f/2.6, TOF 3D ஸ்டீரியோ கேமரா). இதில் இதுவரை மூன்றாவதான 3டி ஸ்டீரியோ கேமராவின் சிறப்புப் பயன்பாடு என்ன என்று அறிவிக்கப்படவில்லை.
128ஜிபி இன்டர்னல் மெமரி உள்ளது. கனெக்டிவிட்டியைப் பொருத்தளவில் 4ஜி VoLTE, வைஃபை, ப்ளூடூத் 5.0, GPS/ A-GPS, USB டைப்-C, NFC சப்போர்ட். accelerometer, சூழொலி உணரி (ambient light),நெருங்கமை உணரி (proximity) ஆகிய சென்சார்களைக் கொண்டுள்ளது. திரையுடன் கூடிய கைரேகை உணரியும் (fingerprint sensor) உள்ளது.
ஓப்போ நிறுவனத்தின் Super VOOC தொழில்நுட்பத்துடன் கூடிய 3,700mAh பேட்டரி. அளவுப் பரிமாணங்கள்: 157.6x74.6x7.9மிமீ, எடை 183கிராம்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?
Single Papa Now Streaming on OTT: All the Details About Kunal Khemu’s New Comedy Drama Series
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation