ஒப்போ K3 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் வெளியிடப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் K3 வெளியிடப்படும். பர்பிள் மற்றும் கருப்பு கிரேடியன்ட் நிறங்களில் ஒப்போ K3 ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த மே மாதம் K3, சீனாவில் வெளியானது. டூயல் ரியர் கேமரா, பாப் அப் செல்ஃபி, இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் உள்ளிட்ட வசதிகளை K3 பெற்றிருக்கும். ஒப்போ A9 எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், K3 வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
K3-யின் விலை குறித்து இன்று 6 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில்தான் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும். இந்த போன் அமேசான் ஆன்லைன் தளம் மற்றும் ஒப்போ ஆன்லைன் தளத்தில் கிடைக்கும். போன் வாங்க விருப்பும் உள்ளவர்கள் ஒப்போ தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஒப்போ K3 விலை (எதிர்பார்க்கப்படும் விலை):
சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் 3 வகைகளில் அறிமுகமானது. 6GB ரேம் + 64GB சேமிப்பு வசதி, 6GB ரேம் + 128GB சேமிப்பு வசதி மற்றும் 8GB ரேம் + 256GB சேமிப்பு வசதி என்ற அளவுகளை கொண்ட இந்த மூன்று வகைகள் 1,599 யுவான்கள் (16,100 ரூபாய்), 1,899 யுவான்கள் (19,100 ரூபாய்) மற்றும் 2,299 யுவான்கள் (23.,100 ரூபாய்) என்ற விலைகளில் விற்பனையாகின. எனவே சீன விலைக்கு ஏற்பவே இங்கும் K3 விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.
ஒப்போ K3: சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. 6.5-இன்ச் அளவிலான FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் என்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரின்ட் சென்சாரையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமராவை கொண்டுள்ளது. பின்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் கேமரா என இரண்டு கேமராக்களை பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3,765mAh அளவிலான பேட்டரியையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்