Oppo நிறுவனத்தின் அடுத்த அதிரடி தயாரிப்பான K15 Turbo Pro போனின் முக்கிய சிறப்பம்சங்கள் லீக் ஆகியுள்ளன
Photo Credit: Oppo
Oppo K15 Turbo Pro உயர்தர Dimensity 9500s, 8000mAh பேட்டரி, cooling fan; Q2 2026 அறிமுகம் எனக் காட்டுகிறது (leaks)
ஒப்போ நிறுவனம் இப்போ ஒரு தரமான கேமிங் போனை ரெடி பண்ணிட்டு இருக்காங்க. அதுதான் Oppo K15 Turbo Pro. இந்த போனை பத்தின லேட்டஸ்ட் தகவல்கள் இப்போ ஆன்லைன்ல கசிஞ்சு, டெக் உலகத்தையே ஆச்சரியப்பட வச்சிருக்கு. முதல்ல இந்த போன்ல Snapdragon 8 Gen 5 சிப்செட் இருக்கும்னு பேச்சு போயிட்டு இருந்துச்சு. ஆனா இப்போ வந்திருக்கிற லீக்ஸ் படி, இதுல MediaTek-வோட லேட்டஸ்ட் Dimensity 9500s சிப்செட் இருக்கும்னு சொல்றாங்க. இந்த சிப்செட் கேமிங்குக்கு ரொம்பவே பவர்ஃபுல்லா இருக்கும். நீங்க எவ்ளோ பெரிய கேம் விளையாடினாலும் லேக் ஆகாம சூப்பரா ஹேண்டில் பண்ணும்.
இந்த போனோட மிக முக்கியமான ஹைலைட்டே இதோட பேட்டரிதான். சாதாரணமா 5000mAh பேட்டரி பார்த்திருப்போம், ஆனா இதுல 8000mAh மெகா பேட்டரி இருக்குனு சொல்றாங்க. அதுமட்டும் இல்லாம, போன் சூடாகாம இருக்க உள்ளேயே ஒரு Active Cooling Fan-ஐ வச்சிருக்காங்க. இதுல இருக்குற 0.1mm பிளேட்ஸ் 18,000 RPM வேகத்துல சுத்தி காத்தை உள்ள தள்ளும். சோ, போன் எப்பவும் 'சில்'லுன்னு இருக்கும்.
கேமராவை பொறுத்தவரைக்கும், இதுல 50MP மெயின் கேமரா இருக்கும். இது ஒரு 'சோனி' சென்சாரா இருக்க அதிக வாய்ப்பு இருக்கு, அதனால போட்டோஸ் எல்லாம் செம்ம கிளாரிட்டியா வரும். டிஸ்ப்ளேல 6.78-இன்ச் 1.5K OLED பேனல் வித் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. பார்க்குறதுக்கும், யூஸ் பண்றதுக்கும் இது ரொம்பவே பிரீமியமா இருக்கும்.
இந்த போன் முதல்ல சீனாவுல லான்ச் ஆகிட்டு, அப்புறமா இந்தியாவுக்கு வரும். இந்திய விலையை பொறுத்தவரை ₹35,000-லிருந்து ₹40,000 பட்ஜெட்ல வர வாய்ப்பு இருக்கு. ஒரு கேமிங் போன்ல இவ்வளவு பெரிய பேட்டரி வர்றது இதுவே முதல்முறை. உங்க பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி ஒரு பவர்ஃபுல் கேமிங் போன் வேணும்னா, கண்டிப்பா இந்த Oppo K15 Turbo Pro-க்காக நீங்க வெயிட் பண்ணலாம். இந்த போனை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
OpenAI, Anthropic Offer Double the Usage Limit to Select Users Till the New Year
BMSG FES’25 – GRAND CHAMP Concert Film Now Streaming on Amazon Prime Video