OPPO நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் போரான Find X9 Ultra-வின் ரெண்டர்கள் (Renders) தற்போது கசிந்துள்ளன. இது ஒரு தனித்துவமான டூயல்-டோன் பினிஷ் மற்றும் பெரிய கேமரா மாட்யூலுடன் வரப்போவது உறுதியாகியுள்ளது.
OPPO Find X9 அல்ட்ரா ரெண்டர்கள் ஒரு தடிமனான இரட்டை-டோனை வெளிப்படுத்துகின்றன
கேமரா போன்களுக்கு பெயர் போன ஒப்போ (OPPO) நிறுவனம் இப்போ ஒரு மிகப்பெரிய "சம்பவத்துக்கு" ரெடி ஆகிட்டாங்க. பொதுவாகவே ஒப்போவோட 'Find X' சீரிஸ்னாலே கேமரால புது புது வித்தைகளை காட்டுவாங்க. இப்போ அந்த வரிசையில OPPO Find X9 Ultra பத்தின ரகசிய தகவல்கள் இப்போ கசிஞ்சு டெக் உலகையே அதிர வச்சிருக்கு. "இதான்பா உண்மையான பிரீமியம் லுக்"னு சொல்ற அளவுக்கு இதோட டிசைன் வேற லெவல்ல இருக்கு. அப்படி என்ன ஸ்பெஷல்? வாங்க, விலாவாரியா பார்ப்போம். இந்த போனோட ரெண்டர்களை பார்த்தாலே உங்களுக்கு முதல்ல கண்ணுல படுறது இதோட பின்புற டிசைன் தான். வழக்கமான கிளாஸ் பாடி இல்லாம, இதுல ஒரு Bold Dual-Tone லுக் கொடுத்திருக்காங்க. அதாவது போனோட மேல்பகுதி ஒரு மெட்டீரியல்லயும், கீழ் பகுதி ஒரு பிரீமியம் லெதர் (Vegan Leather) பினிஷ்லயும் இருக்கு. இது போனுக்கு ஒரு ராயல் மற்றும் ரெட்ரோ லுக் கொடுக்குது. கையில பிடிச்சாலே ஒரு ஸ்போர்ட்ஸ் காரை பிடிச்ச மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும்னு சொல்றாங்க.
கேமரா மாட்யூல் பாக்குறதுக்கே ஒரு பெரிய கடிகாரம் மாதிரி வட்டமா பிரம்மாண்டமா இருக்கு. இதுல வழக்கம் போல Hasselblad பிராண்டிங் இருக்கு.
● Quad Camera Setup: இதுல நான்கு கேமராக்கள் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
● Periscope Lens: மிக முக்கியமான விஷயம், இதுல டூயல் பெரிஸ்கோப் கேமரா இருக்க வாய்ப்பு இருக்கு. அதாவது தூரத்துல இருக்குற பொருட்களை கூட துல்லியமா, கிளாரிட்டி குறையாம ஜூம் பண்ணி எடுக்கலாம்.
● Sensor: சோனியின் லேட்டஸ்ட் 1-இன்ச் சென்சார் இதுல பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கு. போட்டோகிராபி பிரியர்களுக்கு இது ஒரு பெரிய கொண்டாட்டம் தான்.
டிசைன் மட்டும் இல்ல மக்களே, உள்ளே இருக்குற இன்ஜினும் செம பவர்ஃபுல்!
தற்போது வெளியாகி இருப்பது ஒரு ஆரம்ப கட்ட தகவல்கள் தான். இந்த வருடம் இறுதிக்குள் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் OPPO Find X9 Ultra அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படலாம். ஒப்போ Find X9 Ultra-வின் இந்த புதிய லுக் உண்மையிலேயே மிரட்டலா இருக்கு. ஐபோன் மற்றும் சாம்சங் ஃபிளாக்ஷிப் போன்களுக்கு இது ஒரு டஃப் காம்பெடிஷனா இருக்கும்ல எந்த சந்தேகமும் இல்லை. நீங்க இந்த புது லெதர் டிசைனை பத்தி என்ன நினைக்கிறீங்க? இது பாக்குறதுக்கு நல்லா இருக்கா இல்ல பழைய டிசைனே ஓகேவா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Vivo V70 Series Price in India, Design and Launch Timeline Leaked: Expected Specifications, Features