Oppo Find X9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது
Oppo Find X9 series features a Hasselblad-tuned quad-rear camera setup Oppo Find X9 தொடரில் Hasselblad-டியூன் செய்யப்பட்ட குவாட்-ரியர் கேமரா அமைப்பு உள்ளது
Oppo நிறுவனம் அவங்களுடைய அடுத்த பிளாக்ஷிப் சீரிஸான Oppo Find X9 மாடல்களை இந்தியாவுல லான்ச் பண்றத கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க. இந்த Oppo Find X9 Pro மற்றும் Find X9 மாடல்கள், சீனாவுல ஏற்கனவே அறிமுகமாகிவிட்டது. இப்போ உலகளாவிய (Global) லான்ச் ஈவென்ட் அக்டோபர் 28-ஆம் தேதி நடக்குது. இதைத் தொடர்ந்து, இந்தியன் மொபைல் காங்கிரஸ் (IMC 2025) ஈவென்ட்ல சொன்ன மாதிரி, இந்த போன்கள் நவம்பர் மாசம் நம்ம இந்தியாவுல கண்டிப்பா லான்ச் ஆகும்னு Oppo உறுதி செஞ்சிருக்காங்க. ஒரு லீக்ஸ்ல நவம்பர் 18-ஆம் தேதி லான்ச் இருக்கலாம்னு கூட தகவல் வந்திருக்கு.
இந்த சீரிஸ் முழுக்க முழுக்க MediaTek Dimensity 9500 சிப்செட்ல இயங்குது. இது ஒரு 3nm பிளாக்ஷிப் சிப்செட். பெர்ஃபார்மன்ஸ் செம ஃபயரா இருக்கும்.
இந்த ரெண்டுலயுமே 1.5K ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் 3600 nits உச்ச பிரகாசம் இருக்கு. அதோட, டிஸ்பிளேயைச் சுத்தி இருக்கிற பெசல் (Bezel) வெறும் 1.15mm மட்டும்தான்.
பேட்டரியைப் பொறுத்தவரைக்கும் பெரிய அப்கிரேட்! Find X9 Pro-ல 7,500mAh பேட்டரியும், Find X9-ல 7,025mAh பேட்டரியும் இருக்கு. ரெண்டுலயுமே 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் இருக்கலாம்னு சொல்லப்படுது. இது ஒரு நாள் முழுக்க தாங்கும்னு Oppo சொல்றாங்க.
கேமராதான் மாஸ்
Find X சீரிஸ்-னா கேமராதான் முக்கியம்.
விலை எதிர்பார்ப்பு: இந்தியாவில் Find X9 மாடலின் விலை சுமார் ₹65,000 ரேஞ்ச்ல இருந்து ஆரம்பிக்கலாம். Find X9 Pro மாடல் ₹1,00,000-க்கும் கம்மியா வர வாய்ப்பிருக்கு. மொத்தத்துல, Oppo Find X9 சீரிஸ் இந்த வருஷம் இந்தியன் பிளாக்ஷிப் மார்க்கெட்டே அதிர வைக்க போகுது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்