Oppo-வின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் மாடலான Find X8 Pro இப்போது Flipkart-ல் மிகப்பெரிய விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது
Photo Credit: Oppo
Oppo Find X8 Pro இந்தியாவில் ரூ.99,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
நீங்க ஒரு வெறித்தனமான கேமரா போன் வாங்கணும், ஆனா பட்ஜெட் ஒரு லட்சத்தை தொடுதேன்னு யோசிச்சிட்டு இருக்கீங்களா? அப்போ உங்களுக்கு ஒரு தரமான "ஜாக்பாட்" அடிச்சிருக்கு. Oppo-வோட அல்டிமேட் பிளாக்ஷிப் போன் Find X8 Pro மேல Flipkart-ல இப்போ பயங்கரமான டிஸ்கவுண்ட் போயிட்டு இருக்கு. இந்த போன் இந்தியாவுல லான்ச் ஆனப்போ இதோட விலை ₹99,999. ஆனா இப்போ Flipkart-ல ₹15,000 நேரடி தள்ளுபடி செஞ்சு ₹84,999-க்கு லிஸ்ட் பண்ணிருக்காங்க. இதுமட்டும் இல்லாம, உங்ககிட்ட Flipkart Axis Bank இல்லன்னா SBI கிரெடிட் கார்டு இருந்தா, இன்னும் ஒரு ₹4,000 எக்ஸ்ட்ரா டிஸ்கவுண்ட் கிடைக்குது. மொத்தத்துல கணக்கு போட்டு பார்த்தா, ₹19,000 குறைஞ்சு வெறும் ₹80,999-க்கே இந்த போனை தட்டித்தூக்கிடலாம்.
ஒப்போ-வோட இந்த 'Pro' மாடல்ல இருக்குற மெயின் ஹைலைட்டே இதோட Hasselblad கேமராதான். பின்னாடி நாலு 50MP கேமராக்கள் இருக்கு. இதுல இருக்குற 6x ஆப்டிகல் ஜூம் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் வச்சு நிலாவையே தெளிவா போட்டோ எடுக்கலாம். அதுவும் இல்லாம, ஐபோன் 16-ல இருக்குற மாதிரி இதுலயும் ஒரு பிரத்யேக "Quick Button" இருக்கு, அதை வச்சு டக்குனு போட்டோ எடுத்துக்கலாம்.
இதுல இருக்குறது MediaTek Dimensity 9400 சிப்செட். இது சும்மா ராக்கெட் மாதிரி வேலை செய்யும். ஹெவி கேமிங் பண்ணாலும் போன் சூடாகாது. பேட்டரியை பொறுத்தவரை 5,910mAh பேட்டரி குடுத்திருக்காங்க. 80W வயர்டு சார்ஜிங்ல 50 நிமிஷத்துல போன் ஃபுல்லா சார்ஜ் ஆயிடும். அதுமட்டும் இல்லாம, 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இருக்கு.
இந்த பட்ஜெட்ல ஆப்பிள் இல்லன்னா சாம்சங் போன்களுக்கு இது ஒரு செம ஆல்டர்நேட்டிவ். குறிப்பா போட்டோகிராபி மேல ஆர்வம் இருக்குறவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். புது வருஷம் வர்றதுக்குள்ள ஒரு நல்ல போன் வாங்கணும்னு நினைக்கிறவங்க, இந்த ₹19,000 டிஸ்கவுண்ட் டீலை மிஸ் பண்ணிடாதீங்க. உங்களுக்கு ஒப்போ-வோட கேமரா பிடிக்குமா இல்ல சாம்சங்-ஓட ஜூம் பிடிக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
WhatsApp Reels Shortcut for Chats Rolling Out to Android Beta Testers
Spotify Says Family Plan Verification Will Continue as It Tightens Account-Sharing Rules