ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 லைட் அறிமுகம்! முழு விவரம் உள்ளே! 

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 லைட் அறிமுகம்! முழு விவரம் உள்ளே! 

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 லைட் இரண்டு கலர் ஆப்ஷனகளில் வழங்கப்படும்.

ஹைலைட்ஸ்
  • இந்த போன், ஒரே 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு மாதிரியில் விற்பனை செய்யப்படு
  • இது, 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,025 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது
  • ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 லைட்டில் 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது
விளம்பரம்

Oppo Find X2 Lite போர்ச்சுகலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போன் 5 ஜியை ஆதரிக்கிறது. இது இரண்டு கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இந்த போன், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 


ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 லைட் விலை:

போனின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் 12 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷனின் விலை யூரோ 999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83,400)-யாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த போன் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலிலும் கிடைக்கிறது. இது மூன்லைட் பிளாக் மற்றும் பேர்ல் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் வருகிறது.


ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 லைட் விவரங்கள்: 

இந்த போன், முழு எச்டி + ரெசல்யூஷன் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.4 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது, கலர்ஓஎஸ் 7 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இதில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி-யால் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி எல்டிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

போனின் பின்புற குவாட் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் பிரதான கேமராவும், 8 மெகாபிக்சல் சென்சார் வைட்-ஆங்கிள் லென்ஸும் அடங்கும். பின்புற கேமரா தொகுதியில் இரண்டு 2 மெகாபிக்சல் கேமராக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. செல்ஃபிக்களுக்காக, முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா, வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்சில் வைக்கப்பட்டுள்ளது.

Oppo ஃபைண்ட் எக்ஸ் 2 லைட், 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,025 எம்ஏஎச் பேட்டரியையைக் கொண்டுள்ளது. போனின் எடை சுமார் 180 கிராம் மற்றும் 7.96 மிமீ தடிமன் கொண்டது.

  • KEY SPECS
  • NEWS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 765
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4025mAh
OS Android 10
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »