ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 லைட் என்பது மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 தொடரின் சமீபத்திய கூடுதலாகும்.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 லைட் இரண்டு கலர் ஆப்ஷனகளில் வழங்கப்படும்.
Oppo Find X2 Lite போர்ச்சுகலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போன் 5 ஜியை ஆதரிக்கிறது. இது இரண்டு கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இந்த போன், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
போனின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் 12 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷனின் விலை யூரோ 999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83,400)-யாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த போன் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலிலும் கிடைக்கிறது. இது மூன்லைட் பிளாக் மற்றும் பேர்ல் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
இந்த போன், முழு எச்டி + ரெசல்யூஷன் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.4 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது, கலர்ஓஎஸ் 7 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இதில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி-யால் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி எல்டிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
போனின் பின்புற குவாட் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் பிரதான கேமராவும், 8 மெகாபிக்சல் சென்சார் வைட்-ஆங்கிள் லென்ஸும் அடங்கும். பின்புற கேமரா தொகுதியில் இரண்டு 2 மெகாபிக்சல் கேமராக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. செல்ஃபிக்களுக்காக, முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா, வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்சில் வைக்கப்பட்டுள்ளது.
Oppo ஃபைண்ட் எக்ஸ் 2 லைட், 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,025 எம்ஏஎச் பேட்டரியையைக் கொண்டுள்ளது. போனின் எடை சுமார் 180 கிராம் மற்றும் 7.96 மிமீ தடிமன் கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Canon EOS R6 Mark III Mirrorless Camera With 32.5-Megapixel Sensor Launched in India: Price, Features