ஒப்போ நிறுவனம் தனது அடுத்த பிளாக்ஷிப் போல்டபிள் போன் Find N6-ல் 200MP கேமராவை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மற்ற சிறப்பம்சங்கள் மற்றும் வெளியீட்டு விவரங்களை இங்கே காணலாம்.
Photo Credit: Oppo
ओप्पोचा पुढील फोल्डेबल फ्लॅगशिप फोन, फाइंड एन६, फेब्रुवारी २०२६ मध्ये लाँच होण्याची अफवा आहे.
இன்னைக்கு நாம பார்க்கப்போறது டெக்னாலஜி உலகத்துல ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிற ஒரு லீக் பத்திதான். போல்டபிள் (Foldable) போன் மார்க்கெட்ல இப்போ சாம்சங் மற்றும் ஹுவாவே நிறுவனங்களுக்கு செம டஃப் கொடுத்துட்டு வர்றது 'ஒப்போ' (Oppo). இப்போ அவங்களோட அடுத்த அதிரடி படைப்பான Oppo Find N6 பத்தின தகவல்கள் ஆன்லைன்ல வெளியாகி டெக் ரசிகர்களை மிரள வச்சிருக்கு. இந்த போனோட மிக முக்கியமான ஹைலைட்டே இதோட கேமரா செட்டப்தான். பிரபல டிப்ஸ்டர் 'Digital Chat Station' கொடுத்த தகவலின்படி, Oppo Find N6-ல பின்புறம் மூன்று கேமராக்கள் இருக்கும். அதுல ஒரு கேமரா 200 மெகாபிக்சல் (200MP) சென்சாரா இருக்கும்னு சொல்லப்படுது. இது பெரும்பாலும் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸா (Periscope Telephoto) இருக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. இதனால ஜூம் பண்ணி போட்டோ எடுக்கும்போது தரம் துளியும் குறையாது. இது கூடவே ரெண்டு 50MP கேமராக்களும், கலர் துல்லியத்துக்காக ஒரு 2MP மல்டிஸ்பெக்ட்ரல் சென்சாரும் வரப்போகுது.
டிஸ்ப்ளே விஷயத்துல பார்த்தீங்கன்னா, உள்ளே 8.12 இன்ச் கொண்ட பிரம்மாண்டமான 2K LTPO OLED ஸ்க்ரீன் இருக்கும். வெளியில 6.62 இன்ச் கவர் டிஸ்ப்ளே கொடுத்திருக்காங்க. ரெண்டு ஸ்க்ரீன்லயும் 20MP செல்பி கேமராக்கள் இருக்கும். இவ்வளவு பெரிய போன், இவ்வளவு கேமரா அம்சங்கள் இருந்தும் இதோட எடை வெறும் 225 கிராம் தான் இருக்கும்னு சொல்றதுதான் ஆச்சரியமான விஷயம். இதனால கையில வச்சு யூஸ் பண்ணும்போது ரொம்ப லேசா இருக்கும்.
6000mAh பேட்டரி இருக்கு
பெர்பாமன்ஸ்ல எந்த குறையும் வைக்காம, குவால்காமின் லேட்டஸ்ட் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்டை இதுல பயன்படுத்தப்போறாங்க. இதுல 16GB வரைக்கும் ரேம் மற்றும் 1TB வரைக்கும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ் வரலாம். இன்னொன்னு என்னன்னா, இதுல 6000mAh பேட்டரி இருக்குன்னு லீக் ஆகியிருக்கு. போல்டபிள் போன்ல இவ்வளவு பெரிய பேட்டரி வர்றது இதுவே முதல்முறைன்னு சொல்லலாம்.
கூடுதல் சிறப்பம்சங்களா, இதுல சாட்டிலைட் கனெக்டிவிட்டி (Satellite Connectivity) வசதி இருக்கும். அதாவது டவர் இல்லாத இடத்துல கூட நீங்க மெசேஜ் அனுப்ப முடியும். இது டைட்டானியம், டீப் பிளாக் மற்றும் கோல்டன் ஆரஞ்சு ஆகிய மூணு கலர்ல வரும்னு எதிர்பார்க்கப்படுது. சீனாவில இது ஜனவரி 2026-ல அறிமுகமாகலாம், அதுக்கப்புறம் இந்தியாவுக்கும் வர வாய்ப்பு இருக்கு.
மொத்தத்துல, ஒரு போல்டபிள் போன்ல கேமரா, பேட்டரி, டிஸ்ப்ளேன்னு எல்லாத்துலயும் 'டாப் கிளாஸ்' அம்சங்களை Oppo கொண்டு வரப்போறாங்க. இந்த Oppo Find N6 வந்தா, சாம்சங் போல்ட் போன்களுக்கு இது ஒரு பெரிய சவாலா இருக்கும். இந்த போன் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? 200MP கேமரா போல்டபிள் போனுக்கு தேவையா? கீழ கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Redmi Turbo 5, Redmi Turbo 5 Pro to Be Equipped With Upcoming MediaTek Dimensity Chips, Tipster Claims