Photo Credit: Oppo
Oppo Find N5 ஆனது சீனாவில் Oppo Watch X2 உடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போது நாம் பார்க்க இருப்பது Oppo Find N5 செல்போன் பற்றி தான்.
Oppo Find N5 அடுத்த வாரம் உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும். வரவிருக்கும் Find N5 கைபேசியில் 3D-அச்சிடப்பட்ட டைட்டானியம் அலாய் கீல் இடம்பெறும். பல டீஸர்களுக்குப் பிறகு Oppo நிறுவனம் இறுதியாக அதன் அடுத்த மடிக்கக்கூடிய செல்போனை சீனாவிலும் பிற சந்தைகளிலும் அதே தேதியில் வரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த செல்போன் மூன்று வெளிப்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று வண்ணங்களில் வெளியிட்டுள்ளது. இவற்றில் ஒன்று சீனாவிற்கு வெளியே கிடைக்காது என கூறப்படுகிறது.
வரவிருக்கும் Oppo Find N5 பிப்ரவரி 20 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும். இந்த நிகழ்வு மாலை 7 மணிக்கு (அதாவது இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு) தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது மடிக்கக்கூடிய செல்போனை சீனாவிலும் உலகளாவிய சந்தைகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை Oppo உறுதி செய்துள்ளது. சீனாவில் நடைபெறவிருக்கும் நிகழ்வில் Oppo Watch X2 செல்போனும் அறிமுகப்படுத்துவதாக Oppo நிறுவனம் முன்பு உறுதிப்படுத்தியது. Oppo Find N5 செல்போன் ஜேட் ஒயிட், சாடின் பிளாக் மற்றும் ட்விலைட் பர்பிள் வண்ணங்களில் கிடைக்கும். இருப்பினும், யூடியூப்பில் ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீட்டு நிகழ்விற்கான டீஸரில் ஊதா கலர் மாடல் இல்லை.
Gizmochina வழியாக கசிந்த தகவல்படி Oppo Find N5 சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Qualcomm நிறுவனத்தின் ஏழு-கோர் Snapdragon 8 Elite சிப், 512GB மெமரி மற்றும் 16GB RAM உடன் பொருத்தப்பட்டிருக்கும். இது 12GB ரேம் வரை விரிவாக்கப்படலாம். Oppo Find N5 மூன்று கேமரா அமைப்புடன் பொருத்தப்பட்டிருக்கும். 50-மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் 50-மெகாபிக்சல் மற்றும் 8-மெகாபிக்சல் சென்சார்கள் முறையே டெலிஃபோட்டோ மற்றும் அல்ட்ராவைடு கேமராக்களாக இருக்கலாம். இது இரண்டு 8-மெகாபிக்சல் கேமராக்களையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று கவர் திரையில் மற்றும் ஒன்று இன்னர் டிஸ்ப்ளேவில் இருக்கும்.
நிறுவனத்தின் ColorOS 15 பயனர் இடைமுகத்துடன் Find N5 ஆண்ட்ராய்டு 15ல் இயங்கும் என்று எதிர்பார்க்கலாம். கசிந்த ஸ்கிரீன்ஷாட் தகவல்படி 80W (வயர்டு) மற்றும் 50W (வயர்லெஸ்) சார்ஜிங் சப்போர்ட் இருக்கும். 5,600mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்பதையும் வெளிப்படுத்துகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்