ஓப்போ ஏஸ் 2, 65W சூப்பர் வூக் 2.0 ஃப்ளாஷ் சார்ஜ் மற்றும் 40W ஏர் வூக் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்குகிறது.
ஓப்போ ஏஸ் 2 ஏப்ரல் 20 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும்
ஓப்போ ஏஸ் போனின் அடுத்த வெளியீடாக புதிய ஏஸ் 2 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம். இந்த போன், குவாட் ரியர் கேமராக்களுடன் வருகிறது. 6.5 அங்குல முழு எச்டி + டிஸ்பிளே கொண்ட ஓப்போ ஏஸ் 2, ஏப்ரல் 20 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும்.
போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு மாடலின் விலை சிஎன்ஒய் 3,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.43,200),
அதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சிஎன்ஒய் 4,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.47,500) மற்றும்
டாப்-எண்ட் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சிஎன்ஒய் 4,599 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 49,700) ஆகும்.
இந்த போன் அரோரா சில்வர், மூன் ராக் கிரே மற்றும் பேண்டஸி ஊதா கலர் ஆப்ஷன்களில் வெளியிடப்பட்டுள்ளது.
Oppo Ace 2, டூயல்-சிம் ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது, கலர்ஓஎஸ் 7.1 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்குகிறது. இந்த போன் 6.5 இன்ச் (1080x2400 பிக்சல்கள்) முழு எச்டி + அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
போனின் குவாட் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் லென்ஸ் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
ஓப்போ ஏஸ் 20-வில் 65W சூப்பர் வூக் 2.0 ஃப்ளாஷ் சார்ஜ் மற்றும் 40W ஏர் வூக் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. போர்டில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவுடன் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Hollow Knight: Silksong Voted Game of the Year at 2025 Steam Awards: Full List of Winners